வியாழக்கிழமை குரு பகவானை எப்படி வழிபட வேண்டும்
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாள் இந்த வியாழக்கிழமை குரு பகவானை எப்படி வழிபட்டால் நமக்கு சிறப்பு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் நீங்கள் உங்கள் ராசியில் குரு பகவான் பிறந்திருந்தால் அதாவது நீங்கள் பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அல்லது குரு பகவானின் குருதசை அல்லது குரு புத்தி அல்லது குரு பெயர்ச்சி காலங்களில் கண்டிப்பாக குரு பகவானை வணங்க வேண்டும் அப்படி குரு பகவானை வணங்குவதன் மூலமாக சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.
வியாழக்கிழமை குருபகவானை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது ஆனால் குருபகவானை வழிபடுவதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு அதைத்தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம் நீங்கள் குரு பகவான் என்னுடைய அருளை பெற வேண்டும் என்றால் இப்படி செய்து பாருங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும் வாருங்கள் வியாழக்கிழமை குரு பகவானின் வழிபடுவது எப்படி வியாழக்கிழமை குரு பகவானை வழிபட்டால் என்ன சிறப்பு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
வியாழக்கிழமை குரு பகவான் வழிபாடு
★ குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் வியாழக்கிழமை விரதம்.
★ குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ மாலை சூட்டி, கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு கொண்டு அர்ச்சனை செய்து குருவிற்குரிய மந்திரங்களை கூறி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.
★ குருவை நேராய் நின்று கும்பிடு என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.





















