விநாயகருக்கு பூஜை செய்யும் போது பல பொருட்கள் விநாயகருக்கு வைத்து படைக்கப்பட்டாலும் அதில் மிக முக்கியமான பொருளாக விநாயகர் பெருமானுக்கு பிடித்த அருகம்புல்லை நிச்சயமாக ஒவ்வொரு விநாயகர் கோவிலிலும் விநாயகருக்கு சாற்று வழிபாடு செய்வார்கள் அருகம்புல் எதற்காக படைக்கின்றார்கள் அப்படி என்ன இருக்கின்றது மற்றும் விநாயகருக்கு அருகம்புல் எதற்காக வைத்து வணங்கப்படுகிறது என்பதை பற்றிய ஒரு வரலாற்று கதையை தெரிந்து கொள்வோம் சுருக்கமாக வாருங்கள்.
அனலரசன் என்பவர் அனைவரையும் சாம்பலாக்கும் திறன் பெற்றவராக வாழ்ந்து வந்தார் அந்த வகையில் தேவர்களின் கோரிக்கையின் பெயரில் விநாயகர் அவரை பிடித்து வாய்க்குள் போட்டு விழுங்கி விடுகின்றான் ஆனைமுகம் கடவுளின் விநாயகருடைய வயிறு அனலாக எரிய ஆரம்பிக்கிறது அந்த நேரத்தில் முனிவர்கள் சில பேர் அங்கு வந்து விநாயகரின் உடல் குளிர்ச்சி ஆவதற்காக அருகம்புல்லை சாற்றினர் அன்று முதல் இன்று வரை அருகம்புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.




















