வாயுத்தொல்லை குணமாக என்ன செய்ய வேண்டும் வாயுத் தொல்லையில் இருந்து விடுபட எளிமையான வீட்டு மருத்துவ முறை
இருப்பதிலேயே மிக மோசமான விஷயம் என்னவென்றால் வாய்வுத் தொல்லை கண்ட இடத்தில் கண்ட நேரத்தில் வாய்வு விடுவதால் அங்கு துர்நாற்றம் ஏற்பட்டு அனைவரும் மத்தியில் நாம் கூனி குறுகி நிற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளிவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் அனைவருமே சிரிக்கக் கூடிய நிலைமைக்கும் அது தள்ளி விடுகிறது. அதனால் இந்த வாய்வு தொல்லையிலிருந்து எப்படி நாம் கட்டுப்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.
மூலப் பொருள்
வாயுத்தொல்லை பிரச்சினையால் அவதிப்படும் அத்தனை பேருக்கும் இது சமர்ப்பணம் என்னென்ன செய்ய வேண்டும் சாதிக்காய் சுக்கு சீரகம் இவை மூன்றையும் சம பங்கு எடுத்து நன்கு பொடியாக்கி உணவு சாப்பிடும் முன் ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படாது.
விளக்கம்
தினமும் காலை எழுந்தவுடன் காலைக்கடனை கண்டிப்பாக முடிக்க வேண்டும் மலம் வயிற்றில் இருந்தால் கண்டிப்பாக வாயு தொல்லை வரும் அதனால் மலம் வயிற்று இல்லாத அளவுக்கு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்கின்றேன் இருந்தாலும் எனக்கு வாயு தொல்லை இருக்கிறது. என்று சொல்லக்கூடியவர்கள் இந்த முறையை பயன்படுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல பலனை உங்களால் உணர முடிச்சும் முன்னோர்கள் சொன்ன மகத்துவமான வீட்டு மருத்துவ முறை வாயு தொல்லையில் இருந்து எளிமையாக விடுபடலாம்.