வயிற்று வலியை குணப்படுத்தும் வீட்டு மருத்துவம்/ Home Remedies for Stomach Pain / how to stop stomach pain treatment in natural

வயிற்று வலியை குணப்படுத்தும் வீட்டு மருத்துவம் / Home Remedies for Stomach Pain / how to stop stomach pain treatment in natural:-

பொதுவாக நாம் வீட்டில் சாப்பிடக்கூடிய சில உணவுப் பொருட்கள் அல்லது வெளியில் கடைகளில் சாப்பிடக்கூடிய சில உணவுப் பொருட்களின் மூலமாக நமக்கு வயிற்று வலி ஏற்படுகிறது என்றால் நாம் எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே இந்தப் பொருளை இப்படி சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய வயிற்று வலி நிச்சயம் குறையும் இது எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத நம்முடைய பாட்டி வைத்தியம்.

நீங்கள் சாப்பிட்ட ஒரு பொருளால் உங்களுக்கு வயிறு வலி ஏற்படுகிறது என்றால் அல்லது வயிற்றில் ஏதோ ஒரு சத்தம் ஏற்படுகிறது என்றால் அல்லது வயிறு பெரட்டுகிறது என்றால் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இது.
உங்கள் வீட்டில் நிச்சயம் உப்பு மற்றும் சர்க்கரை இந்த இரண்டு பொருளும் எல்லோர் வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் இந்த இரண்டு பொருள் போதும் உங்களுடைய வயிற்று வலியை குணப்படுத்த
பயன்படுத்தும் முறை:-
ஒரு சொம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் ஒரு டீ ஸ்பூன் உப்பையும் ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் போட்டு கலக்க வேண்டும் அந்த கலக்கிய தண்ணீரை முழுவதும் குடிக்க வேண்டும்..
இப்படி செய்வதன் மூலமாக உங்களுடைய வயிற்று வலி அதாவது மிதமான வயிற்று வலி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு குணமாகும்… அதுமட்டுமல்ல டயரியா நிக்காமல் ஆகி கொண்டிருப்பதன் மூலமாக வயிற்று வலி ஏற்பட்டாலோ அல்லது தன்னுடைய உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தது போல ஒரு உணர்வு தோன்றினாலோ இந்த டயரியாவையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நிச்சயம் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் உப்பையும் ஒரு டீஸ்பூன் சுகரையும் இரண்டையும் போட்டு கலந்து குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு உப்பின் அளவும் அதிகரித்து உங்களுடைய உடல் சோர்வு நிச்சயம் குணமாகும்.
இந்த வைத்தியம் நம்முடைய முன்னோர்கள் செய்து வந்த ஒரு விஷயம். அதேபோல வயிற்று வலி ஏற்படும் போது உங்களுடைய தொப்புளில் தேங்காய் எண்ணெயை அல்லது விளக்கெண்ணையை தேய்ப்பதன் மூலமாக உங்களுடைய குடலினுடைய உஷ்ணம் குறைந்து, உங்களுக்கு வயிற்று வலி குறையும். இதை தாராளமாக பயன்படுத்திப்பாருங்கள் எந்த விதமான பக்க விளைவும் கிடையாது 100% உங்களுக்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.
எல்லோரும் இதை குடிக்கலாமா என்றால் நிச்சயமாக குடிக்கலாம் யாருக்கெல்லாம் அல்சர் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் வயிற்று வலியால் அவதிப்படும்போது இதை அவர்கள் குடிப்பதன் மூலமாக வயிற்று வலி குறைக்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இதை பயன்படுத்தும் போது அவர்களுடைய வயிற்று வலிகளும் குணமாக்கப்படுகிறது, இதை பெண்களை பயன்படுத்தி பயனடைந்துள்ளார்கள். இதனால் எந்த பக்க விளைவும் இல்லை தைரியமாக ஒவ்வொருவரும் இதை பருகலாம்.
யார் யார் பருக வேண்டும்;-
சிறியவர் முதல் பெரியவர் வரை அதாவது ஆறு வயது முதல் அல்லது இரண்டு மூன்று வயது முதல் 60 70 80 வயது வரை இருக்கக்கூடியவர்கள் இதை பருகலாம் இதனால் எந்த வித பக்க விளைவும் கிடையாது..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top