வயிறு மந்தம் குறைய என்ன செய்ய வேண்டும் பசி எடுக்காமல் இருக்கிறது பசி எடுக்க என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை
வயிறு மந்தமாக இருக்கிறது, சரியாக பசி எடுக்கவில்லை பசி எடுக்க நான் என்ன செய்வது என்று கேட்கக்கூடிய. அத்தனை பேரும் எளிமையான வீட்டு மருத்துவ முறையிலேயே நாம் அந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் வாருங்கள் பார்ப்போம்.
மூலப் பொருள்
வில்வ மரத்தின் பூக்களை உலர்த்தி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் வயிறு மந்தம் குணமாகும் பசி எடுக்காதவர்களுக்கு கூட அதிக அளவு பசியை தூண்டிவிடும் நல்ல ஜீரண சக்திகளை கொடுக்கும்.
விளக்கம்
ஒரு மனிதனுக்கு வயிறு மந்தமாக இருக்கிறது பசி எடுக்கவில்லை என்றால் ஒன்று மனரீதியான பிரச்சினை மனரீதியான வேதனைகள் இருக்கும் போது பசி என்ற உணர்வு ஏற்படாது ஒருவர் சந்தோஷமாக இருக்கும் போது பசி உணர்வு அதிகமாக இருக்கும். வயிறு மந்தமாக தெரியாது இது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயம் நான் எந்தவித மனரீதியான வேதனைகளும் அனுபவிக்கவில்லை இருந்தாலும் எனக்கு வயிறு மந்தமாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அத்தனை பேரும் இதை பயன்படுத்திப்பாருங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.