வாரத்தின் கடைசி நாள் நாம் முனீஸ்வரனை வணங்குவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும் குறிப்பாக முனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்கு எலுமிச்சை பழத்தை நம் தலையை சுற்றி உடைப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் நடைபெறும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்
பொதுவாக முனீஸ்வரன் என்றால் யார் என்று நாம் கேட்டால் நம் முன்னோர்கள் என்று சொல்வார்கள் அதற்கு காரணம் உண்டு நம்முடைய ஊரையும் நம் குளத்தையும் காத்து அந்த மகா முனீஸ்வரர் என்று நம் தாத்தா பாட்டிகள் நம்மிடம் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட முனீஸ்வரனை நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதைப் பற்றியும் வணங்கினால் நமக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் நடைபெறும் என்பதைப் பற்றியும் நாம் இதில் பார்க்க போகின்றோம்
முனீஸ்வரனை வணங்கும் முறை :
முனீஸ்வரனுக்கு பிடித்தமான பொருளை எல்லாம் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு முதலில் செல்ல வேண்டும் அது என்ன பிடித்தமான பொருள்.
9. கருப்புறம்
முனீஸ்வர்க்கு பிடித்தமான பூஜை பொருளை எல்லாம் வாங்கிக் கொண்டு கோவிலுக்கு முதலில் செல்ல வேண்டும். பிறகு அங்கு இருக்கக்கூடிய பூசாரியிடம் பூஜை பொருளை கொடுத்து முனீஸ்வரன் பூஜை செய்யும்படி சொல்லி பூஜை நடக்கும்போது மனதார முனீஸ்வரனை வேண்டிக் கொள்ள வேண்டும்.
முடிந்தால் எலுமிச்சை பழ மாலையை உங்கள் கையாலேயே கோத்து மாலையாக தயாரித்து முனீஸ்வரனுக்கு சாப்பிடுவதன் மூலமாக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்
நன்மைகள் :
முனீஸ்வரனை குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் நாம் ஏன் வணங்க வேண்டும், என்றால் ஞாயிற்றுக்கிழமை முனீஸ்வரனுக்கு உகந்த நாள் அதாவது ஞாயிற்றுக் கிழமை முனீஸ்வரனை வணங்க முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றால் நம் உடம்பில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் அத்தனையும் விலகிப்போகும். நம்மை சுற்றி இருக்கக் கூடிய கண் திருஷ்டிகள் நம்மீது இருந்தாலும் அது அத்தனையும் அகற்றப்படும். குறிப்பாக வீட்டில் தீய சக்திகள் எதாவது இருந்தால் அதுவும் துரத்தியடிக்கும் அதனால்தான் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் முனீஸ்வரன் கோவில் செல்லவேண்டும் என்று சொல்கின்றோம்
முனீஸ்வரனை வணங்கிவிட்டு ஒரு எலுமிச்சை பழத்தை இடது கையில் எடுத்துக்கொண்டு உங்கள் தலையை மூன்று முறை வலது புறமாக மூன்று முறை, இடது புறமாக மூன்று முறை, நேராக சுற்றிவிட்டு, உங்கள் இடது காலில் மிதிக்க வேண்டும் இப்படி செய்வதன் மூலமாக நம்மை பிடித்துக் கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகும் வேண்டுமென்றால் ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே அதனுடைய பலன் நன்றாக தெரியும்
நீங்கள் முனீஸ்வரன்னிடம் வேண்டுதல் வைக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுக்கு சப்போர்ட்டாக யாராவது முனீஸ்வரன் வணங்கக்கூடிய உங்க சொந்தக்காரரை கூட்டிக்கொண்டு போய் ஜாமீனுக்கு நிறுத்த வேண்டும் அப்படி நீங்கள் வேண்டியதை செய்யாவிட்டால் அவர் செய்கின்றார் என்று அவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போது முனீஸ்வரன் முன்வந்து உங்களுக்கு வேண்டிய அத்தனை விஷயங்களையும் செய்து கொடுப்பார்
குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெற வேண்டுமென்றால் முனீஸ்வரனை மனதார வணங்கினால் நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் அப்படி குழந்தையை பெற்றெடுத்த உடன் முனீஸ்வரனை பார்க்க நான் வருகின்றேன் வரும்போது உங்களுக்கு பிடித்தமான விஷயத்தை கொண்டு வந்து செய்கின்றேன் என்று வேண்டிக் கொண்டால் ஒரு வருடத்தில் உங்கள் வீட்டில் குழந்தை சத்தம் கேட்கும்
எந்தெந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கக்கூடிய எந்த முனீஸ்வரன் கோவில் இருந்தாலும் தாராளமாக ஞாயிற்றுக் கிழமையில் சென்று அவரை வணங்கலாம் அதனால் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்
முனீஸ்வரனை யாரெல்லாம் வணங்கலாம் என்றால் ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் வணங்கலாம் ஏனென்றால் முனீஸ்வரன் பொதுவான கடவுள் அவரை வணங்குவதால் எந்தவித தீய சக்திகளும் உங்களை அண்டாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் அதனால் தைரியமாக முனீஸ்வரனை வணங்கி பாருங்கள் நடக்கக் கூடிய நன்மைகளை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்