புதிய வீடு கட்ட எந்த திசை நமக்கு நன்மைகளை கொடுக்கும் மற்றும் எந்த திசையில் வீடு கட்டினால் சிறப்பு என்பதை வாருங்கள் பார்க்கலாம்

புதிய வீடு கட்ட எந்த திசை நமக்கு நன்மைகளை கொடுக்கும் மற்றும் எந்த திசையில் வீடு கட்டினால் சிறப்பு என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

புதிதாக வீடு கட்டுவது என்பது பல பேரின் கனவு அப்படிப்பட்ட கனவை நிஜமாக்கும்போது அங்கு வந்து நிற்கக் கூடிய விஷயம் வாஸ்து எந்த திசையில் நீங்கள் வீடு கட்டினால் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் உங்கள் குடும்பம் முன்னேறும் நோய் வருமானம் எதுவும் பாதிக்கப்படாமல் நல்ல நிலைமையில் முன்னேற முடியும் என்பதற்கு வாஸ்து மிக மிக முக்கியம் அதுவும் வீடு கட்டும் போது கட்டாயம் நமக்கு உண்டான திசையை நாம் தேர்ந்தெடுத்து கட்ட வேண்டும் அதை தான் பார்க்கப் போகின்றோம்.

வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் கண்டிப்பாக பல பேருக்கு இடம் வாங்கி இருப்பீர்கள் ஆனால் எந்த திசையை நோக்கி வாங்க வேண்டும் என்ற ஒரு புரிதல் இல்லாமல் கிடைக்கக்கூடிய இடத்தை நீங்கள் வாங்கி இருப்பீர்கள் அது எந்த பிரச்சனையும் அல்ல.

பொதுவாக உங்களுடைய ராசி நட்சத்திரத்தை வைத்து உங்களுக்கு எந்த திசை யோகத்தைத் தரும் என்பதை அறிந்து கொண்டு நீங்கள் அந்த திசையில் கட்டலாம் இதுதான் இன்றளவு பல பேர் செய்து கொண்டிருக்கக் கூடிய விஷயம் வீடு கட்டுவதற்கு முன் பக்கத்தில் இருக்கக்கூடிய ஜோதிடரிடம் சென்று எந்த திசையில் வீடு கட்ட வேண்டும் என்னுடைய ராசிக்கு என்று கேட்டு அதன்படி அவர்கள் செய்கிறார்கள் இது ஒரு விதம்.

இரண்டாவது விதம் இன்று அதிக அளவு தெரிந்த விஷயம் என்பதால் புதிதாக இடம் வாங்கும் போது வடக்கு திசை அல்லது கிழக்கு திசையை பார்த்த மாதிரி விடை வாங்குவார்கள் அல்லது இடத்தை வாங்குவார்கள் ஏனென்றால்.

வடக்கு திசை மற்றும் கிழக்கு திசை எந்த ராசியாக இருந்தாலும் பொருந்தக்கூடிய திசை நீங்க எந்த ராசியாக வேண்டுமானாலும் இருங்கள் தாராளமாக வடக்கு திசையில் நீங்கள் வாசப்படி வைத்து வீடு கட்டலாம் நீங்கள் அமோகமாக வளர்வீர்கள் அதேபோல கிழக்கு திசையிலும் நீங்கள் வீடு கட்டினால் எந்த ராசிக்காரர்கள் ஆக இருந்தாலும் வளர்ச்சிகள் அமோகமாக இருக்கும் என்பது ஐதீகம் இன்றளவும் பல பேர் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு திசை என்பது குருபகவான் பார்க்கக் கூடிய திசை அதனால் வடக்கு திசையில் வாசப்படி வைத்து கட்டும்போது மிகப்பெரிய பலன் குருவா நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம் அதனால் வடக்கு திசையை பார்த்து வாங்குகிறார்கள் பல ஜாதகங்களுக்கு பல ராசிகளுக்கு வடக்கு திசை பொருந்தும் நீங்க ஜாதகமே பார்க்க வேண்டாம். வடக்கு திசையில் நீங்கள் இடம் வாங்கி இருந்தால் தாராளமா வீடு கட்டலாம்.

கிழக்கு திசை என்பது சூரிய பகவான் பார்க்கக்கூடிய திசை சூரியன் இல்லாமல் அதுவும் இல்லை என்பது போல சூரியன் பார்க்கக் கூடிய வாசப்படி மிகவும் சிறப்பு வாய்ந்தது நீங்கள் எந்த ராசி வேண்டுமானாலும் இருக்கலாம் உங்கள் குடும்பத்தில் எந்த ராசிக்காரர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் கிழக்கு திசை அமோகமாக பொருந்தும் அதனால் தான் பல பேரும் கிழக்கு திசையை நோக்கி வீடு வாங்குகிறார்கள் இடம் வாங்குகிறார்கள் ஒருவேளை நீங்கள் கிழக்கு திசையாக இருந்தால் எந்த ஜோதிடமும் பார்க்கத் தேவையில்லை தாராளமாக கண்ணை மூடிக்கொண்டு வீடு கட்டலாம்.

ஒருவேளை மேற்கு திசை அல்லது தெற்கு திசையில் தான் எனக்கு வழி அமைந்தது என்றால் வேறு வழி அல்ல ஒன்று மேற்கு திசையாக இருந்தால் வடக்கு வாசப்படி வருவது போல சந்து வைத்து கட்டிக் கொள்ளலாம் அல்லது தெற்கு திசையாக இருந்தால் அதற்கு ஒரு சில பரிகாரங்கள் இருக்கின்றன பின்புறம் வாசப்படி வைக்க வேண்டும் வடக்கு பார்த்த மாதிரி இப்படி ஒரு சில முக்கியமான ஐதீகங்கள் இருக்கின்றன அதை நீங்கள் செய்து கொள்ளலாம்.

இதுவரை இடம் வாங்கியவர்கள் விட்டு விடுங்கள் இதற்கு மேல் நீங்கள் இடம் ஏதாவது வாங்குவது போல இருந்தால் அல்லது புதிய வீடுகள் ஏதாவது வாங்குவது போல் இருந்தால் கண்டிப்பாக கிழக்கு திசை அல்லது வடக்கு திசை பார்த்த மாதிரி வாங்குவது நல்லது..

( நீங்கள் வீடு கட்டப் போவதாக முடிவு எடுத்து விட்டால் கண்டிப்பாக வீடு கட்டுவதற்கு முன் வீட்டினுடைய கொட்டேஷன் என்று சொல்லக்கூடிய தொகை எவ்வளவு ஆகும் என்ற ஒரு கணக்கை நீங்கள் தனித்தனியாக எழுதி வைத்துக் கொள்வது ஒரு சிறப்புமிக்கது ஏனென்றால் நீ எழுதும் கொட்டேஷன் இல் இருந்து எப்படி பார்த்தாலும் மூன்று லட்சம் அல்லது 4 லட்சம் அதிகமாக தான் வரும் அதனால் முதலில் வீடு கட்டுவதற்கான செலவுகள் எவ்வளவு ஆகின்றன என்பதை பற்றி ஒரு வரையறு வேண்டும் )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top