நீங்காத ஒற்றைத் தலைவலியை போக்குவதற்கான எளிய வீட்டு மருத்துவம் / Simple Home Remedies to Relieve Migraines:-
இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பெண்களும் சரி, ஆண்களும் சரி ஒற்றை தலைவலியை அதிகமாக அனுபவித்து வருகிறார்கள். காரணம் அதிக அளவு டென்ஷன், அதிக அளவு யோசனை, அதிகமாக கணினி மற்றும் தொலைபேசியை பயன்படுத்துவதன் மூலமாக தலையில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ஒற்றைத் தலைவலி ஏற்பட்டு விடுகிறது. இதை மைக்ரைன் என்று சொல்வார்கள் இதனால் ஒவ்வொரு ஆண் பெண் சிறுபிள்ளைகளும் இந்த ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறார்கள். எளிமையான வீட்டு மருத்துவத்தின் மூலமாக எப்படி நாம் ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து தலையில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கொய்யா மரத்தில் இருக்கக்கூடிய கொய்யா இலை. இந்த கொய்யா இலையை எடுத்துக் கொண்டு வந்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் அரைத்துக் கொண்ட அந்த கொய்யா இலையோடு சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து இன்னும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் அரைக்கப்பட்ட அந்த மூலிகையை உங்களுடைய தலையில் அதாவது நெத்தியில் அரைக்கப்பட்ட அந்த இலைச்சாற்றையும் நன்கு வைத்து பற்று போட வேண்டும். ஒரு துணியால் கட்ட வேண்டும் அல்லது அரைக்கப்பட்ட இலையை தலையில் பற்று போல் நெற்றியில் வைக்க வேண்டும் அப்படி ஒரு இருபது நிமிடம் அல்லது ஒரு அரை மணி நேரம் உங்கள் நெத்தியில் அது பற்று வடிவில் இருந்தால் நிச்சயமாக நீங்காத ஒற்றைத் தலைவலி நீங்கும்
மைக்ரைன் என்று சொல்லக்கூடிய தலைவலி நீண்ட நாட்களாக இருக்கக்கூடியவர்கள் கூட இதை பயன்படுத்தலாம். நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல ரிசல்ட் கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் இதை எந்தவித பக்க விளைவும் கிடையாது இதை பயன்படுத்தியும் உங்களுக்கு தலைவலி குறையவில்லை என்றால் நிச்சயமாக சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கவும் நல்ல மருத்துவரை அணுகி அதற்கான ட்ரீட்மெண்ட்டை எடுத்துக் கொள்ளவும்..
Post Views: 68
Related