தொண்டை கரகரப்பு குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை வாருங்கள் தெரிந்து கொள்வோம்
வெயில் காலம் என்று வந்துவிட்டாலே தொண்டை கரகரப்பு ஏற்படும் இதற்கு மிக முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை நாம் எடுத்துக் கொள்வதன் மூலமாக நமக்கு சளி என்ற பிசுபிசுப்பு தன்மை நுரையீரலில் அதிகரித்து அந்த நுரையீரலின் வழியாக சுவாசம் மேற்கொள்ளும் போது தொண்டை கரகரப்பு நமக்கு ஏற்படுகிறது இதை நாம் எப்படி எளிமையான முறையில் நாட்டு மருத்துவத்தைக் கொண்டு சரி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் உங்களுக்கு தொண்டை கரகரப்பு இருந்தால் இது நிச்சயமாக உங்களுக்கு கை கொடுக்கக் கூடிய ஒரு பதிவு வாருங்கள் எப்படி சரி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்
தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.