தீராத வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடிய நன்கு பசி எடுக்கக்கூடிய, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, வில்வ இலை சாறு உதவுகிறது / Ulcer treatment in Nattu maruthuvam

தீராத வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடிய நன்கு பசி எடுக்கக்கூடிய, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, வில்வ இலை சாறு உதவுகிறது / Ulcer treatment in Nattu maruthuvam

சிவன் கோவிலுக்கு போனால் வில்வ இலையால் அபிஷேகம் செய்வார்கள் அங்கு இருக்கக்கூடிய பல கடவுள்களுக்கு வில்வ இலையை சாத்துவதன் மூலமாக பல நன்மைகள் நமக்கு நடக்கும் என்று பல பேர் சொல்லி இருப்பார்கள், இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அந்த வகையில் வில்வ இலை சாறு நமக்கு என்னென்ன நன்மைகளைக் கொடுக்கப் போகிறது என்பதை பற்றி தான் இன்று நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். இவ்வளவு பயன்கள் நமக்கு தருகிறதா இந்த வில்வ இலை என்று நம்மையே ஆச்சரியப்படச் செய்யும் அளவிற்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டதுதான் இந்த வில்வ இலை. சோ, இதனுடைய மகத்துவத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்பதனால் தான் சிவன் கோவில்களில் சிவனுக்கு வில்வ இலையால் அபிஷேகம் செய்ய வேண்டும். அவருக்கு பிடித்த ஒரு இலை என்ற ஒரு உன்னதமான கூற்றை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

மூலப் பொருள்:

வில்வ இலைச்சாறு

வில்வ இலை சாறு நமக்கு என்னென்ன பயன்களை தருகிறது என்றால் வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது அதாவது அல்சர் இருக்கக்கூடியவர்கள் இந்த வில்வ இலை சாறை குடிக்கலாம் இந்த வில்வ இலை சாறை குடிப்பதால் நல்ல பசி எடுக்கும் காய்ச்சலை குறைக்கும் நீரிழிவை தடுக்கும் நீரிழிவு என்றால் சர்க்கரை நோயை வராமல் பாதுகாக்க இந்த வில்வ இலை சாறு உதவுகிறது.

செய்முறை:

உங்கள் ஊர்களில் அல்லது கிராமப்புறங்களில் வில்வ இலை நிச்சயமாக கிடைக்கும் இந்த வில்வ இலையை கொண்டு வந்து அம்மியில் போட்டு நன்கு அரைத்து ஒரு துணியில் அதை வடிகட்டுவதன் மூலமாக அதனுடைய சாறு நமக்கு கிடைக்கும். அந்த சாற்றை நாம் குடிப்பதன் மூலமாக வயிற்றுப் புண்கள் ஆறாமல் இருந்தால் ஆறும், நன்றாக பசி எடுக்கும், காய்ச்சலை குறைக்க உதவுகிறது, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது, இப்படி பல வகையில் அது நமக்கு நன்மைகளை தருகிறது. ஆனால் இப்படி ஒவ்வொரு முறையும் என்னால் அம்மியில் போட்டு வில்வ இலையை அரைத்து அந்த சாற்றை குடிக்க முடியாது என்று சொல்லக்கூடியவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் வில்வ இலை சாறு என்று கேட்டால் அவர்கள் டானிக் வடிவில் உங்களுக்கு கொடுப்பார்கள் அதை காலையில் ஒரு டீஸ்பூன் இரவு ஒரு டீஸ்பூன் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு ஆறாத வயிற்றுப்புண். ஆறும்

குறிப்பு:

நான் எப்போதும் சொல்வது போல முடிந்தவரை இயற்கையாக நீங்களே உங்கள் கைகளால் தயாரித்து உண்ணலாம் அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டு கருகாமல் கிடைக்காத பட்சத்தில் நாட்டு மருந்து கடைகளில் அதை டானிக் வடிவில் வாங்கி உண்பது பரவாயில்லை. சில பேருக்கு இந்த நாட்டு மருந்து ஒத்துக்கொள்வது அல்ல ஒவ்வாமை ஆகிவிடுகிறது ஆனால் பல பேருக்கு இது அருமருந்தாக அமைகிறது உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய மருத்துவரை அணுகி அந்த ஒவ்வாமை காண மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top