திருமணத்திற்கு பிறகு குழந்தை என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது தன்னுடைய சங்கதி அடுத்த தலைமுறையை நோக்கி போவதற்கு குழந்தை என்ற ஒரு அங்கீகாரம் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் மிக முக்கியமான ஒரு பேசும் பொருளாகவும் பார்க்கும் பொருளாகவும் இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது திருமணம் என்றாலே அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்காக கொண்டாடப்படும் ஒரு விஷயம் .
அப்படி திருமணம் ஆகி ஒரு வருடமோ ஐந்து வருடமோ 10 வருடமோ 20 வருடமோ அல்லது 30 வருட காலமோ காத்திருந்தும் இன்றளவும் குழந்தை இல்லாமல் இந்த உலகில் எத்தனையோ பேர் இருந்து கொண்டிருக்கின்றன ஆம் குழந்தை இல்லாமல் போவதற்கு காரணம் என்ன அதை நாம் எப்படி கண்டறிவது மேலும் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான வழிகளை இன்று நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
குழந்தை இல்லாமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு
1. ஒரு பெண்ணோ அல்லது ஆணோ முதலில் மருத்துவ மனைக்கு சென்று மருத்துவரை நேரில் சென்று தனக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கிறது எனக்கும் என்னுடைய கணவருக்கும் உடல் ரீதியாக ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என்ற ஒரு விஷயத்தை முதலில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
2. சில பெண்களுக்கு நீர்கட்டி இருக்கும் அதனால் குழந்தை நிற்காமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கும் இதுவும் ஒரு காரணம்.
3. சில பெண்களுக்கு உடல் எடை அதிகமாக இருப்பதால் குழந்தை நிற்காமல் தள்ளிக் கொண்டே போகும் இதுவும் ஒரு காரணம்.
4. சில பெண்களுடைய கர்ப்பப்பை பலம் இழந்து காணப்படுவதால் அவர்களுக்கு குழந்தை நிற்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இப்படி சில பல காரணங்கள் இருந்து கொண்டிருக்கின்றன குழந்தை நிக்காமல் தள்ளி போகி கொண்டிருப்பதற்கு ஒரு காரணம்.
குழந்தை நிற்பதற்கு என்ன செய்ய வேண்டும் எந்த மாதிரி உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்
1. முதலில் செவ்வாழை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக ஆண்கள்.
2. இரண்டாவதாக அதிகளவு சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் முடிந்தவரை குளிர்ந்த நீரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. அதிகளவு முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய முருங்கைக் கீரை முருங்க பிசின் முருங்கை இலை முருங்கக்காய் இப்படி முருங்க மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய அத்தனை பொருட்களையும் வாரத்திற்கு மூன்று முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது தினமும் முருங்கை கீரையில் காலையில் சூப் செய்து குடிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் இது ஒவ்வொரு ஆண்மகனுக்கும் பெண்களுக்கும் மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
4. நான்காவதாக குடிப்பழக்கம் புகையிலை பழக்கம் அல்லது தகாத பழக்கங்களில் இருந்து கண்டிப்பாக வெளிவர வேண்டும் இப்படி சில பழக்கங்கள் இருக்கக்கூடியவர்களுக்கு குழந்தையின்மை அதிகமாக இருக்கிறது இன்றைய காலகட்டத்தில் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
5. கண்டிப்பாக குழந்தை இல்லாமல் இருக்கக்கூடியவர்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை நேரில் பார்த்து குறிப்பிட்ட சில பரிசோதனைகளை செய்து பார்த்து தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம்.
6. குழந்தையே பிறக்காது என்று முடிவு செய்த பிறகு அனாதை இல்லங்களில் அதிக அளவு குழந்தைகள் இருக்கின்றன அதை தத்தெடுத்து வளர்ப்பது மிக சாலச் சிறந்ததாக பார்க்கப்படுகிறது சோ இது கொஞ்சம் மனதிற்கு சோர்வை கொடுத்தாலும் நாட்கள் கடந்து போக எல்லா மருந்து சந்தோஷத்தை வாரி வழங்கும்.
ஒவ்வொரு மக்களும் தன்னுடைய குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதில் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து கொண்டிருக்கின்றன குறிப்பாக திருமணத்திற்கு பிறகு குழந்தை பெறாமல் தள்ளிக் கொண்டு போனால் அவர்கள் படும் இன்னல்கள் இவ்வளவுதான் என்று வாயால் சொல்ல முடியாது அவ்வளவு வார்த்தைகளையும் அவர்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதேசமயம் பல மருத்துவர்களை நேரில் சென்று பார்த்தால் கூட நாட்கள் கடந்து போகுகிறதே தவிர எந்தவிதமான நல்ல செய்தியும் வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் ஏராளமாக இருக்கின்றன.
சோ கண்டிப்பாக கெட்ட பழக்கங்களை விட்டு நல்ல உணவுகளையும் ஆரோக்கியமான உறவுகளையும் டென்ஷன் இல்லாத வாழ்க்கைகளையும் கொண்டவர்கள் வாழ்க்கையில் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை அதனால் ஒவ்வொருவரும் நல்ல உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் அதே மாதிரி உடல் எக்சர்சைஸ் மிக முக்கியம் அதற்குப் பிறகு மனநிம்மதி டென்ஷன் இல்லாத வாழ்க்கை எல்லாத்தையும் விட முக்கியம். இதை எல்லாம் நீங்கள் கடைப்பிடித்தால் நிச்சயமாக எண்ணி ஒரு வருடத்தில் உங்கள் கையில் உங்களுடைய குழந்தை இருக்கும்.