திருமணப் பொருத்தம் பார்ப்பது மிக முக்கியமான விஷயமா.?
திருமணம் பொருத்தம் பார்ப்பது என்பது மிக மிக முக்கியமான விஷயம்தான் ஏனென்றால் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள் அந்த வகையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒன்றாக சேருகிறார்கள் என்றால் திருமணம் பொருத்தம் என்பது மிக முக்கியம் ஏனென்றால் திருமண பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கை நீண்ட காலம் பயணிக்க போகிறதா இல்லையா என்பதை ஒரு ஜோதிடரால் சொல்லப்படுகின்ற ஒரு விஷயம் இது முழுக்க முழுக்க 100% ஜோதிடர் சொல்லக்கூடிய விஷயம் நடக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக அல்ல ஒரு 50 சதவீதத்திலிருந்து ஒரு எழுபது சதவீதம் தான் இது ஒத்துப் போகுமே தவிர மீதி எல்லாம் ஆண்டவர் நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவோ அதன் அடிப்படையில் தான் நடக்கும்.
சோ இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக பெண் வீட்டாரோ அல்லது ஆண் வீட்டாரோ ஜாதகத்தின் அடிப்படையில் திருமணம் பொருத்தம் பார்த்து தான் திருமணங்களை செய்து வைக்கிறார்கள் அப்படி இருந்தும் ஒரு சில திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன ஒரு சில திருமணங்கள் பிரிவில் முடிகின்றன ஆனால் முடிந்தவரை இரண்டு ஜாதகங்களும் ஒத்துப் போகிறதா என்று பார்த்து திருமணம் செய்து வைப்பது என்பது இன்றைய வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது குறிப்பாக ஒரு சில இடங்களில் அது நமக்கு சாதகமாகவும் அமைகின்றது அதனால் கண்டிப்பாக திருமணம் பொருத்தம் பார்த்து திருமணம் பண்ணுவது நல்லது.



















