தலையில் நீர் கோத்து கொண்டிருந்தால் என்ன செய்ய வேண்டும் தலையில் நீர் கோர்த்து கொண்டிருப்பது சரியாக எளிமையான வீட்டு மருத்துவ முறை

தலையில் நீர் கோத்து கொண்டிருந்தால் என்ன செய்ய வேண்டும் தலையில் நீர் கோர்த்து கொண்டிருப்பது சரியாக எளிமையான வீட்டு மருத்துவ முறை:-

தலையில் நீர் கோத்து கொண்டிருந்தால் அடிக்கடி தலைவலி ஏற்படும் இதை சைனஸ் என்று கூட சொல்வார்கள். அல்லது மைக்ரைன் பிரச்சனைக்கு ஒரு அடித்தளமாக இது அமைந்து விடுகின்றன. அதனால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம.

மூலப்பொருள்

தலையில் நீர் கோத்துக்கொண்டால் தலைபாரம் கண்ணிலே மூக்கிலே நீராக கொட்டிக்கொண்டு தும்பல் தொண்டை வலி இதெல்லாம் தொடர்ந்து வரும் ஜலம் என்றால் தண்ணீர் அதனால் ஏற்படுகிற உபாதை தோஷம் அதுதான் ஜலதோஷம் இவை எல்லாவற்றுக்குமே சுலபமான வைத்தியம் இதுதான.

ஒரு வெற்றிலையை கழுவி துடைத்து அதிலே கிராம்பு ரெண்டு ஏலக்காய் 2 மிளகு 6 கொஞ்சம் வெள்ளம் சேர்த்து வைத்து சுருட்டி வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும் ஒரு நாளைக்கு மூன்று வேளை என இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் மூன்றாம் நாள் சளி குறைந்து ஜலதோஷம் பறந்து விடும்.

விளக்கம்

தலையில் நீர் கோத்து கொண்டிருக்கக் கூடியவர்கள் தலையில் நீர் கோத்து கொண்டிருப்பதால் சளி அதிகளவு மூக்கில் வருகிறது என்று சொல்லக்கூடியவர்கள் இந்த முறையை பயன்படுத்துவதன் மூலமாக கண்டிப்பாக ஒரு நல்ல பலனை அவர்களால் அனுபவிக்க முடியும். நம் முன்னோர்கள் சொன்ன எளிமையான வீட்டு மருத்துவ முறை இதில் எந்தவிதமான பக்க விளைவும் இல்லை இதையும் மீறி உங்களுக்கு தொடர்ந்து தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலைபாரம் தலைவலி மூக்கில் தண்ணீர் வருவது போன்ற தொந்தரவுகள் இருந்து கொண்டிருந்தால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி பார்க்க வேண்டும் என்று அர்த்தம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top