ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் சிறப்பு என்ன மற்றும் நன்மைகள் என்ன

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் சிறப்பு என்ன :-

ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்த பிரதோஷம் இந்தப் பிரதோஷத்தன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவதால் உங்களுக்கு என்னென்ன சிறப்புகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

பிரதோஷம் என்பது கண்ணுக்குத் தெரியாத பிற தோஷங்களை போக்கக்கூடிய நாள் இந்த நாளில் நீங்கள் சிவபெருமானை வழிபடுவதால் உங்கள் கண்ணுக்குத் தெரியாத உங்களுடைய பல தோஷங்கள் நிவர்த்தியாகி உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது வரலாறு. அதனால் பிரதோஷம் அன்று கண்டிப்பாக ஒவ்வொருவரும் சிவபெருமானை வணங்க வேண்டும்.

குறிப்பாக பிரதோஷ நேரத்தில் நீங்கள் சிவபெருமானை வணங்கினால் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் அதை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.

ஞாயிறு பிரதோஷ சிறப்பு

★ சூரிய திசை நடப்பவர்கள் ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்தன்று மறவாமல் சென்று தரிசிக்க வேண்டும். இதனால் சூரிய பகவானின் அருள் கிட்டும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

★ கண்ணுக்குத் தெரியாத பல தோஷங்கள் நிவர்த்தியாகி மங்கலம் உண்டாகும.

★ தொழிலில் வளர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடியவர்கள் பிரதோஷம் அன்று சிவனை வழிபட்டால் தொழில் வளர்ச்சி அடையும்.

★ பிரதோஷ நேரத்தில் சிவனை வலது இருந்து இடது, இடப்புறமிருந்து வலப்புறம் என்று மூன்று முறை சுற்றி வந்தால் உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.

★ மன கஷ்டம் குடும்ப கஷ்டம் என்று எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் நிவர்த்தியாகும்.

★ வேண்டியது கிடைக்கும் நாள் இன்று.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top