சமாதி மந்திரில் முதல் தரிசனம்:-
1963 ஆம் ஆண்டில் என் தமையனார் திரு வேதவ்யாஸ் என்னைத் தம்முடன் ஷீரடிக்கு வருமாறு அழைத்தார். அப்போது எனக்கு மஹான்களிடம் நம்பிக்கை என்பதே இல்லாம லிருந்தபோதிலும், அவருக்குத் துணையாகச் செல்ல இசைந்தேன். பெப்ரவரி மாதம் எட்டாம் தேதி, அந்திமயங்கும் வேளையில் ஷீரடியை அடைந்த நாங்கள் ஆரத்தியில் கலந்து கொள்வதற்காக நேராகச் சமாதி மந்திருக்குச் சென்றோம்.
அரை நூற்றாண்டுக்கு முன்பே, தம் பூதஉடலை நீத்துவிட்ட அந்த மஹாளின்மேல் ஆழ்ந்த நம்பிக்கையோடு இருந்த அந்தக் கூட்டத்தினரைக் வியந்தேன். சிறிது நேரத்தில் பக்தர்கள் கலைந்து செல்ல, கோயில் காலி ஆயிற்று. என் தமையனார் என்னைக் கல்லறைக்கு அருகில் அழைத்துக் சென்று காட்டி, அதில் பாபாவின் புனித உடல் வைக்கப்பட்டுள்ளதென்று கூறினார். ஒரு கல்லறையின் மிக நெருக்கத்தில் பார்ப்பது அதுவே முதன்முறையாதலால், நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது முதல் நினைவு, அந்த உடல் எப்படிப்பட்ட அழுகலான நிலையில் இருக்கும் என்பதைப்பற்றிய கற்பனையே! கல்லறையின் சலவைக்கல் கட்டிடமும், அங்குப் புகைக்கப்பட்ட அதிக அளவு தூபமும் எந்தவிதமான நாற்றமும் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் என்று என்னை என்ன வைத்தன. இந்த எண்ணம் என்னால் பொறுக்க முடியாததாகவும், வாந்தியை வரவழைப்பதாயும் இருந்தது. உடனே என் தமையனார்டம் சொல்லிக்கொண்டு, எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் உண்ணவும் விருப்பமற்றவனாக, அறைக்குச் சென்று தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை நல்ல பசி என்னை உறக்கத்திலிருந்து எழுப்ப, நான் நேராக மதராஸ் ஒட்டலை நோக்கி நடந்தேன். சமாதி மந்திரைக் கடக்கும்போது, காலை ஆரத்தி முடிந்து அந்த இடம் காலியாக இருப்பதைக் கண்டேன். சமாதிக்குமேல் இருந்த சலவைக்கல் சிலை என் கவனத்தைக் கவர்ந்தது. எண்ணற்ற பக்தர்களை மயக்கும் அந்த உருவத்தை நெருக்கத்தில் பார்க்க விரும்பி, உள்ளே சென்று சிலையிலிருந்து சற்றுத் தூரத்தில் நின்று அதைப் பார்த்தேன். அது உயிரோடு இருப்பதைப்போலவே தோன்றியது. நம்மால் பொருள் காண முடியாத அந்தப் புன்சிரிப்பையும், உண்முகமான அவரது பார்வையையும் கல்லில் வடிப்பதற்கு அந்தச் சிற்பிக்கு தெய்வீகமான ஊக்கம்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
* அவரது பார்வை எனது கவனத்தைக் கவர்ந்தது. ‘அவரது முகம், அதிலும் சிறப்பாக அவரது பார்வையும் புன்சிரிப்பும், அவரது பாவனையைக் குறித்து என்ன விளக்கு கின்றன? அவ்வளவு பேர்கள் வந்து அவருக்கு மரியாதை செலுத்தி வழிபடுவதைக் கண்டு பெருமிதம் அடைந்துள்ளாரா? அல்லது அவர்கள்பால் ஆழ்ந்த கருணை கொண்டுள்ளாரா? அல்லது அந்த நிலையில் அவர் எங்கும் நிறைந்த பரமாத்மாவிலேயே தமது பார்வையையும் கவனத்தையும் பதித்துத் தமது தனிப்பட்ட தோற்றத்தையே மறந்துவிட்டாரா? அல்லது அங்குக் குழுமும் பக்தர்களைத் தமக்கு ஏற்கனவே ஜன்ம ஜன்மாந்திரங்களாகத் தெரியும் என்பதைக் காட்டும் அறிமுகமான பார்வையா? மீண்டும் சேர்ந்ததைக் குறிக்கும் அந்தப் புன்சிரிப்பில் அவர்கள் எதிர்காலத்தில் அடையக்கூடிய
*நீண்ட காலத்துக்குப் பின் அது உண்மைதான் என்று அறிய வந்தேன். சிற்பி, தனது முயற்சிகளில் திருப்தியடையாமலும் பாபாவின் படங்கள் அவருககு வழிகாட்டப் போதாதவையாயும் இருந்த போது, ஒருநாள் இரவு பாபா அவரது கனவில் தெளிவாகத் தோற்றமளித்துத் தமது அங்க லக்ஷணங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படிக் கூறினார். இதை நிரூபிப்பதற்குச் சான்றுகள் இல்லாவிடினும், அது நிகழ்ந்திருக்கலா மென்றே தெளிவாகத் தோன்றுகிறது.
ஆத்மீக முன்னேற்றத்தைக் குறித்த மகிழ்வும் கலந்துள்ளதா? அல்லது இவை ஒன்றையுமே அறியாதவராக இடையறாத பிரம்ம சிந்தனை யிலேயே லயித்துள்ளாரா? அளவிற்கெட்டாத அந்தச் சாந்தியின் வெளித் தோற்றம்தான் அவரது மோனாலிஸா புள்ளகையோ? அல்லது உயர்ந்ததான ஓர் உணர்வு நிலையில் இந்த எல்லாப் பாவனைகளுமே ஒன்றையொன்று குறுக்கிடாமல் ஒரே சமயத்தில் இருக்க முடியுமா?” என்று வியந்தேன்.