வலி தீராத மூட்டு வலிகளை குணப்படுத்த, தோல் நோய்களை குணப்படுத்த அருமருந்தாக அருகம் புல் சாறு அமைகிறது / Arugampul juice benefits in Tamil.
காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதன் மூலமாக நம் வயிற்றில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேறும் என்று நாம் யாரடி நீ மோகினி என்ற படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியாக நாம் பார்த்திருப்போம். அப்படி என்னதான் இந்த அருகம்புல் சாற்றில் இருக்கிறது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். அருகம்புல் விநாயகருக்கு உகந்தது அதனால் விநாயகர் பண்டிகை எப்போது வருகிறதோ அப்போது கண்டிப்பாக விநாயகருக்கு அருகம்புல்லை வைக்க வேண்டும். ஏன் விநாயகருக்கு வைக்க வேண்டும் என்றால் முதல் கடவுள் விநாயகர் என்று சொல்வார்கள் அதே போல மிக முக்கியமான ஒரு பொருள் அருகம்புல் என்று உணர்த்துவதற்காக அருகம்புல்லை முதல் கடவுளாகிய விநாயகர் பெருமானுக்கு வைக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்தார்கள்.
மூலப் பொருள்:
அருகம்புல் சாறு
இந்த அருகம்புல் சாறு வயிற்றை சுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல பல வகையாக நமக்கு உதவுகிறது. நமது ரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிகரிக்க, ரத்தம் விருத்தியாக அதாவது ரத்தம் அதிகரிக்க இந்த அருகம்புல் நமக்கு உதவுகிறது அது மட்டுமல்லாமல் நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை இந்த அருகம்புல் சாறு தருகிறது, அது மட்டுமல்லாமல் வயிற்று வலி மற்றும் மூட்டு வலிகளை குணப்படுத்துகிறது மிக முக்கியமாக தோல் நோய்களையும் குணப்படுத்துவதில் முன் இருக்கிறது இந்த அருகம்புல் சாறு.
செய்முறை:
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய பச்சையான அருகம்புல்லை எடுத்துக் கொண்டு வந்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதை வடிகட்டி அந்தச் சாறை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டு அதில் எந்தவிதமான சர்க்கரை உப்பும் கலக்காமல் வெறும் வயிற்றில் தினமும் காலை நேரத்தில் எடுத்துக் கொண்டு வந்தால், நீங்காத மூட்டு வலி, வயிற்று வலி நீங்கும், தோல்வியாதிகள் வராமல் கட்டுப்படுத்தும், தோல்வியாதிகள் வந்திருந்தால் அது அருமருந்தாக அமைகிறது. நம் உடம்பில் இருக்கக்கூடிய சிவப்பு அணுக்களை அதிகப்படுத்தி இம்முனிட்டி பவரை அதிகரிக்கச் செய்யும் வேலையை இந்த அருகம்புல் நமக்கு பயன்படுகிறது. உங்க வீட்டுக்கு பக்கத்தில் அருகம்புல் எடுத்து நீங்கள் மிக்சியில் போட்டு அரைத்து குடிக்கவேண்டும் ஒருவேளை அதை செய்ய முடியாது என்று சொல்லக்கூடியவர்கள் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடைகளில் அருகம்புல் சாறு என்று கேட்டால் அவர்கள் தருவார்கள் அதை காலையில் ஒரு மூடி மாலையில் ஒரு மூடி 30 நாட்கள் எடுத்து வந்தால் போதுமானது. அதன் பிறகு நீங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய ரெஸ்டாரன்ட் அல்லது ஜூஸ் கடைகளில் அருகம்புல் ஜூஸ் கிடைத்தால் அதை வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் வாங்கி குடிக்கலாம் உங்கள் உடலுக்கு நல்லது.
குறிப்பு: