சாய் பாபா’வின் சிகிச்சைகள் எப்படி இருக்கும்.?
“பாபா ஷீரடிக்கு வந்த புதிதில், ஆமன்பாய் என்ற முஸ்லிம் பெண்மணி அவருக்கு உணவளித்து வந்தாள். அந்த ஆமன்பாய், எனது பாட்டியின் வீட்டுக்குச் சில சந்கர்ப்பங்களில் வருவதுண்டு. அவளது மகனான 25 வயது கொண்ட கண்பத்ஷரி கனாடே என்பவர்க்குத் தொழுதோயும் கரமும் இருந்தது. ஆமன்பாய், தன் வீட்டுக்கு ஒரு பெரிய மதநாள் வந்திருப்பதாகவும், அவரால் அவளது மகனைக் குணப்படுத்த முடியும் என்றும் கூறினாள், பின்னர் பாபா வந்து நோயாளியைக் கண்டு அவனுக்கு மருந்து அளித்தார். அந்த மருந்து நல்ல பாம்பின் விஷத்தால் செய்யப் பட்டது. பாபா, கண்பத்திடம் நல்லபாம்பொன்றைத் தைரியமாகப் பிடித்துக்கொண்டு வரும்படியும், நல்ல பாம்பு தொழு நோயாளியைக் கடிக்காது என்றும் கூறினார். அவ்வாறே கண்பத் நல்லபாம்பு ஒன்றைப் பிடிக்க, அது அவளைக் கடிக்கவில்லை! அதன் விஷத்திலிருந்து மருந்து தயாரிக்கப்பட்டு கண்பத்துக்கு அளிக்கப்பட்டது. சில நாட்களிலேயே அவன் குணமடையத் தொடங்கினான், உடல் உறவு கொள்ளக்கூடாது என்று பாபா கூறிய விதியை அவள் கடைப்பிடிக்கவில்லை. எனவே, பாபா அவனுக்கு மேற்கொண்டு சிகிச்சை செய்வதை நிறுத்திவிட்டார். விவாதி மேலும் வளர்ந்து கண்பத் இறந்து போளான்,