சனிப்பெயர்ச்சி சனீஸ்வரனை வணங்கும் மந்திரம் / Sani Peyarchi Sani bhgavan Manthiram

சனிப்பெயர்ச்சி சனீஸ்வரனை வணங்கும் மந்திரம் :-

சனி பெயர்ச்சி தொடங்கி விட்டால் கண்டிப்பாக சனீஸ்வரன் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் புரிதலை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டார் என்று அர்த்தம் இவ்வளவு நாள் நீங்கள் உங்களுக்கு சொந்தமில்லாத ஒரு விஷயத்தை உங்களுக்கு தான் சொந்தம் என்று நினைத்துக் கொண்டு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். இந்த சனி பெயர்ச்சி தொடங்கிய நாளிலேயே கண்டிப்பாக ஒரு மாத காலத்திற்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் அதாவது உங்களுக்கென்று நினைத்திருந்த பொய்யான ஒரு விஷயம் உங்களுக்கு இல்லை என்பதை உணர்த்திருப்பார்.

 

அந்த வகையில் சனீஸ்வரனை வணங்கக்கூடிய மந்திரம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சனீஸ்வரன் மந்திரம்

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே, மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாயாக, சச்சருவின்றி சாகா நெறியும், இச்சகம் வாழ என்னருள் தாதே..

இந்த மந்திரத்தை சனி பெயர்ச்சி நடக்கக்கூடிய அத்தனை பேரும் இதை சொல்லலாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் இந்த மந்திரத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.

எப்போதெல்லாம் சங்கடங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம் அது மட்டுமல்லாமல் எப்போதெல்லாம் நல்ல காரியங்கள் ஆரம்பிக்கின்றீர்களோ அப்போதெல்லாம் சனி பகவானை போற்றி இந்த ஒரு மந்திரத்தை, சொல்லிவிட்டு அவரிடம் நல்ல காரியத்தை ஆரம்பிக்கப் போகின்றோம் என்ற ஒரு தகவலையும் சொல்லிவிட்டு ஆரம்பியுங்கள் கண்டிப்பாக ஒரு வெற்றி கிடைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top