சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு நமக்கு மிகப்பெரிய வளர்ச்சிகளை கொடுக்கும் :-
நாம் செய்யக்கூடிய காரியங்களில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினால் கண்டிப்பாக ஆஞ்சநேயரின் உடைய துணை ஒவ்வொருவருக்கும் வேண்டும் அந்த வகையில் சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது வாருங்கள் சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குவதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு
★ சக்திக்கு மட்டுமல்ல பக்திக்கும் உதாரண புருஷராகத் திகழ்கிறார் ஆஞ்சநேயர்.
★ சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது மிகவும் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.
★ சனி ஓரை நேரத்திலும் அனுமனை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால் சகல எதிர்ப்புகளும் தவிடு பொடியாகும். இன்னல்களில் இருந்து மீளலாம்.
★ ஆஞ்சநேயரை வழிபடுவதால் உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடங்கல்கள் தடைகள் நீங்கும்
★ தொழிலில் வளர்ச்சி வருமானம் பெறுக வேண்டுமென்றால் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்
★ ராகு கேது மற்றும் சனியினுடைய தாக்கப் உங்களுக்கு குறைய வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய வேண்டும்
★ ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வணங்கினால் கண்டிப்பாக சகல நன்மைகளும் கிடைக்கம்





















