கொடுத்த பணம் திரும்ப கிடைக்க நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை இன்று நாம் பார்க்கப் போகின்றோம் இந்த பரிகாரம் நீங்களே செய்யலாம்
இரண்டு பரிகாரம் உள்ளது இதில் நீங்கள் ஏதாவது ஒன்றை செய்யலாம்
முதல் பரிகாரம்
1.நாட்டுமருந்துக் கடைகளில் கார்போ அரிசி என்று விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் அந்த அரிசியை வாங்கிக் கொள்ளுங்கள் பிறகு மெல்லிசான தகடு மஞ்சள் நிறம் கொண்ட தகடு அதுவும் நாட்டு மருந்து கடைகளிலேயே தருகிறார்கள் அதை வாங்கிக்கொண்டு யார் உங்களுக்கு பணம் திரும்ப கொடுக்க வேண்டும் அவர்களுடைய பெயர் நட்சத்திரம் எழுதிக்கொண்டு நீங்களாகவே பேசுவதைப் போல அவர்கள் திருப்பி பணம் கொடுக்கவேண்டும் என்பதை அந்த தகட்டில் எழுதி கொண்டு நீங்கள் வாங்கிய அந்த கார்போ அரிசியை அதில் போட்டு உருண்டை கட்டிக்கொண்டு சிவப்பு நூலால் கட்டுவது நல்லது
கட்டிய அந்த உருண்டையை எடுத்துக் கொண்டு போயி இரண்டு அடிக்கு மேலே வளர்ந்த புத்து அதாவது கரையான் புற்றில் போட்டுவிடவேண்டும் பிறகு இரண்டு நாள் கழித்து அந்தப் புற்றுக்கு நீங்கள் போட்ட அதே வழியாக மஞ்சளும் குங்குமமும் போட்டு பணம் திரும்பி கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள் இதே போல மூன்று முறை அல்லது நான்கு முறை செய்ய வேண்டும். குறிப்பாக செவ்வாய் கிழமை அல்லது ஞாயிற்று கிழமை செய்வது நல்லது
இரண்டாம் பரிகாரம்
2. நம் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடு அந்த மாடு காலால் பிராண்டக்கூடிய மண் அந்த மண்ணை எடுத்துக் கொண்டு அந்த தகட்டில் அதாவது நாம் எழுதிய அந்த தகட்டில் அந்த மண்ணை வைத்து உருண்டை கட்டி சிவப்பு நூலால் இருபுறமும் நன்றாக கட்டி அதை எடுத்துட்டு போய் புற்றில் போட்டு வேண்டிக் கொள்ள வேண்டும் குறிப்பாக இந்த மாடு பிராண்டிய மண்ணை அதாவது தன்னுடைய காலால் பிராண்டிய மண்ணை எடுத்துக் கொண்டுபோய் புற்றில் போட்டு வேண்டிக் கொண்டால் நிச்சயம் நடக்கும் ஆனால் அந்த மண் கிடைப்பது மிகவும் அரிது