குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால் என்ன செய்வது? குழந்தைகளுக்கு வயிற்று வலி குணமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை.!
குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டால் என்ன செய்வது? குழந்தைகளுக்கு வயிற்று வலிக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பொதுவாக குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் ஜீரணம் ஆகாத உணவுகளை கண்டிப்பாக கொடுக்கக் கூடாது லேசான உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு டம்ளர் பால் நாட்டுக்கோழி முட்டை கொடுத்தால் அவர்களுக்கு நல்ல சக்தி கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாருங்கள் குழந்தைகளின் வயிற்று வலிக்கு என்ன செய்வது என்று பார்ப்போம்.
மூலப் பொருள்
குழந்தைகளின் வயிற்று வலிக்கு மல்லிகை அதாவது தனியா நாலு மணி நேரம் ஊற வைத்து அந்த ஊற வைத்த தண்ணீரை ஒரு அவுன்ஸ் விதம் கொடுத்து வந்தால் வயிற்றுப் பிரச்சனை தீரும்.
விளக்கம்
கண்டிப்பாக குழந்தைகளுக்கு மல்லிகை தனியா ஒரு நாலு மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை ஒரு அவுன்ஸ் விதம் கொடுத்து வந்தால் வயிறு வலி குறைய வேண்டும். ஒருவேளை அப்படியும் குறையவில்லை என்றால் கண்டிப்பாக பக்கத்தில் இருக்கக்கூடிய மருத்துவரை அணுகி அவர்கள் பரிசோதனை செய்து அதன் பிறகு மருந்துகள் கொடுப்பார்கள். அதை நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ஏனென்றால் குழந்தைகள் வலி தாங்க மாட்டார்கள் இதை கொடுத்து ஒரு அரை மணி நேரத்தில் குழந்தை அழுவதை நிறுத்தவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.