கண் நோய் நீங்க, கண் பார்வை நன்கு தெரிய, உடம்பில் அமிலத்தன்மை குறைய, கேரட் சாறு போதும் / carrot Juice Benefits in Tamil / Carrot Juice Natural treatment in Tamil

கண் நோய் நீங்க, கண் பார்வை நன்கு தெரிய, உடம்பில் அமிலத்தன்மை குறைய, கேரட் சாறு போதும் / carrot Juice Benefits in Tamil / Carrot Juice Natural treatment in Tamil

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும் சரி வயதானவர்களும் சரி தொலைபேசியை அதிகமாக பார்ப்பதன் மூலமாக அதிலிருந்து வரக்கூடிய ஒழியின் அளவு அதிகமாக இருப்பதால் ஒவ்வொருவரினுடைய கண்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் கண்கள் மங்கலாக தெரிய ஆரம்பிக்கிறது பிறகு கண்கள் சரியான பார்வை தெரியாமல் இளைஞர்களும் சரி வயதானவர்களும் சரி கண்ணாடி போடும் அளவிற்கு அது கொண்டு போய் விடுகின்றன. நாம் வீட்டில் இருக்கக்கூடிய இயற்கை பொருளை வைத்துக்கொண்டு நம் கண்ணை எப்படி பாதுகாக்கலாம் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம்.

கண் நோய் நீங்க, கண் பார்வை அதிகமாக நாம் என்ன செய்ய வேண்டும்:

கேரட் சாறு

இந்த கேரட் சாறு தினமும் நாம் காலையில் வெறும் வயிற்றில் உண்பதன் மூலமாக நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றால், கண் நோய் நீங்கவும், கண்பார்வை நன்கு ஒளிரவும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் உடம்பில் அமிலத்தன்மை குறையவும் பல் நோய்கள் நீங்கவும் துணைச் செய்கிறது இந்த கேரட் சாறு.

எப்படி பயன்படுத்துவது:

நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய சந்தையில் கேரட் ஒரு கிலோ வாங்கிக் கொண்டு வந்து தாராளமாக வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அது கெட்டுப் போகாது அப்படி வாங்கி வந்த கேரட்டை தினமும் ஒன்று அல்லது இரண்டு கேரட் மேல இருக்கக்கூடிய தோலை நன்கு சீவி விட்டு பிறகு அந்த கேரட்டை கழுவி அதன் பிறகு உங்கள் வீட்டில் கண்டிப்பாக மிக்சி இருக்கும் அந்த மிக்ஸியில் அந்த கேரட்டை போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், வடிகட்டியில் அந்த கேரட்டை ஊற்றி நன்கு வடிகட்டினால் சாறு மட்டும் நமக்கு கிடைக்கும் அந்த சாற்றை தினமும் காலை சர்க்கரை கலக்காமல் வெறும் வயிற்றில் கேரட் சாறு குடித்து வந்தால் கண்டிப்பாக கண் நோய் நீங்கவும் கண்பார்வை நன்கு ஒளிரவும் உடம்பில் அமிலத்தன்மையை குறைக்கவும் பல் நோய் இருந்தால் அது அகலமும் இந்த கேரட் சாறு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

யாரெல்லாம் உண்பது:

மூன்று வயதில் இருக்கக்கூடிய குழந்தைகள் ஆரம்பித்து 90 வயது வரை இருக்கக்கூடியவர்கள் அத்தனை பேரும் இந்த கேரட் சாறு சர்க்கரை கலக்காமல் நாட்டுச்சக்கரை கலக்காமல் வெறும் கேரட் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சகல நன்மைகளும் கூடி கண் பார்வை உங்களுக்கு நன்றாக தெரியும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்கலாமா:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கேரட் சாறில் எந்தவிதமான சர்க்கரை மற்றும் நாட்டு வெள்ள சர்க்கரை சேர்க்காமல் வெறும் கேரட் சாற்றை மட்டும் வடிகட்டி நீங்கள் தாராளமாக குடிக்கலாம் இதில் எந்தவித சர்க்கரையின் அளவு அதிகரிக்காது சர்க்கரை உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் போதுமானது. ஆனால் முக்கியமான விஷயம் நீங்கள் எந்த பழத்தை சாப்பிட்டாலும் எந்த சாற்றை குடித்தாலும் மறக்காமல் சர்க்கரை மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top