கடகம் ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் / Kadakam Rasi Life Story in Tamil
கடக ராசி பூசம் நட்சத்திர..
பாவாதிபதிகள்
உங்கள் இலக்கினாதிபதி சர்வலாபம் எனப்படும் பதினொன்றாம் பாவத்தில் அமர்ந்திருப்பதன் விளைவாக கலை உணர்வு, அழகை ரசித்தல், இசையில் ஈடுபாடு மற்றும் கேளிக்கைகளில் ஈடுபடும் தீவிர மனப்பாங்குடையவர். இருபாலர்களிடமும் தங்கு தடையின்றி கலந்து உறவாடுவீர்கள். மண வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கக்கூடிய ஒழுக்கக்குறைவான செயல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதில் தனி கவனம் தேவை. தங்களது திருமணவாழ்கை கால தாமதம் அல்லது இடர்களுக்கு பிறகே நடைபெறக் கூடும். பணத்தட்டுப்பாடு என்பது உங்களுக்கு கிடையாது. மேலும் உங்களது தொழில் வளர்ச்சிக்கு உங்களது மூத்த சகோதரர் பெரிதும் கைகொடுப்பார்.
உங்களது இரண்டாம் பாவாதிபதி உங்களது பத்தாம் இல்லத்தில் இருப்பதன் காரணமாக, நீங்கள் மற்றவர்களின் போற்றுதலுக்கு உரியவர் ஆவீர்கள். நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் பலதரப்பட்ட துறைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆசைகளை ஒழிப்பதற்கு நீங்கள் கடினமாக சுய கட்டுப்பாடு பேண வேண்டும். எந்தவித வினாவும் இன்றி அன்பு என்பது காண்பிக்கவேண்டிய மற்றும் காண்பிக்கப்படவேண்டிய ஒன்றாகும் என்பது உங்களது கருத்து பலவித தொழில்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். விவசாயம், வியாபாரம் மற்றும் தத்துவ போதனைகள் போன்றவை இதில் அடங்கும். இதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடைவீர்கள்.
உங்களது மூன்றாம் அதிபதி மூன்றாம் இல்லத்தில் இருக்கின்ற படியால் உங்களது சகோகர சகோரிகளுடன்
கூடி ஒற்றுமையாகவும் இன்பமாகவும் வாழக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். யாரையும் ஏமாற்ற கூடாது. எல்லாம்
நன்மைக்கே என்ற மன உணர்வும், ஒவ்வொரு சூரிய உதயமும் நல்லவனவற்றையே தரும் என்கின்ற
திடமான எண்ணமும் உடையவர். இதன் காரணமாக கடந்த காலத்தினை வருத்தமாக நீங்கள் மனதில்
அசைபோட மாட்டீர்கள். காரணம், இன்றைய உங்களது வாழ்வு லட்சிய நிலை கொண்டதாக இருப்பதாலேயே
ஆகும். சகோதரர்களுடன் சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு.
உங்களது ஐந்தாம் அதிபதி பத்தாம் இடத்தில் உள்ளபடியால், உங்களுக்கு இராஜயோக பலன்கள் உண்டாகும். உங்களது குழந்தைகள் ஒவ்வொருவரும் தத்தம் கடமையைச் செம்மையாக ஆற்றுதல் அவசியம் என்று எதிர்பார்ப் பீர்கள். உங்களது வாழ்க்கைத்துணை இதிலிருந்து மாறுபட்டவர். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்படும் வீட்டுச்சண்டை சச்சரவுகளில் சண்டை ஆரம்பிப்பதற்கு முன்பே வெற்றி உங்களுக்குத் தான் என்று உங்களது இல்ல உறுப்பினர்கள் முடிவெடுத்து விடுவார்கள். உங்களது குழந்தைகளில் ஒருவர் தலைசிறந்த பண்பாளராக விளங்கி அனைவராலும் பாராட்டப்படுவார். அவர் துப்பறியும் துறையில் சேர்ந்து பணியாற்ற நேரலாம்.
உங்கள் ஆறாமதிபதி பதினொன்றாம் இல்லத்தில் உள்ளபடியால், பல சாதனைகள் புரிந்து உங்களது எதிரிகளின் சொத்துக்களை கைப்பற்றுவீர்கள். ஆனால் நீங்கள் சம்பாதிக்கும் வேகத்தினைவிட உங்கள் வாழ்க்கைத்துணை செலவு செய்யும் வேகம் மிக அதிகமானது. உங்களது பங்குதாரரின் பொருளாதார வளத்திற்கு தகுந்தபடி நீங்கள் அனுசரித்துக்கொண்டு காரியம் நடத்துவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் கிடைக்கும் சுக வாழ்வு உங்களுக்கு மிகக் குறைவாக இருக்கும். நல்லதும் கெட்டதும் கலந்த ஒன்றாகவும் இருக்கும். உங்களது சகோதரர் சட்டத்துறையில் பணி புரிவார்.
உங்கள் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டிலிருக்கின்றபடியால். உங்களுக்கு ராஜயோகப் பலன்கள் நடைபெறும்.
ஆசைப்படுகின்ற பலவகை போகப் பொருள்களும் மற்றும் பேரும் புகழும் இந்த இராஜயோகம்சுக உங்களுக்கு தரும், ஆறாமிடம் நோய் ஸ்தானத்தைக் குறிக்கின்ற காரணத்தினால் சில சமயங்களில் நீங்கள் நோய்வாய்ப்படுவது தவிர்க்க இயலாதது. எந்த எந்த விதத்தில் உடல் நலம் பாதிக்கப்படும் என்று கருதுவதிலேயே உங்களது மனது பாதிக்கப்படும். திருட்டு போக நேரிடும். காவலர்களின் விசாரணைக்கு ஆளாக நேரிடும். மற்றும் நீதிமன்ற பிரச்சினைகளில் சிக்கக்கூடும். உங்களது தாய் மாமன் உடல் நலம் பாதிக்கக்கூடும். ஆனால் எல்லாவற்றையும் நீங்கள் வெற்றிக்கொண்டு, அதன்பிறகு நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள். உங்களுக்கு தொல்லைத் தருபவர்களை தோற்கடித்து, அத்தொல்லைகளை தூள்தூளாக்கி விடுவீர்கள். நண்பர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்துவிட்டால், அவரை உங்களது வாழ்வினும் தாழ்விலும் கடுகு அளவேனும் பிரிய மாட்டீர்கள். எதிரி என்று கருதிவிட்டல், அவரை படாதபாடு படுத்துவீர்கள்.
உங்கள் பத்தாம் அதிபதி பத்தாம் வீட்டிலுள்ள படியால். உங்களது பணிகளில் வெற்றிகள் பல குவிப்பீர்கள். இதனால் மதிப்புகளும் மரியாதைகளும் உங்களை தேடி வரும். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் மத ஆச்சாரங்களில் மன ஈடுபாடு கொண்டு வாழநேரிடும். உங்களின் முன்னோடிகளுக்குரிய மரியாதையினை தாங்களும் பெற வேண்டும். என்பதே உங்களது குறிக்கோள் ஆகும். எல்லோரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாகவும் மற்றம் ஒரு உண்மை ஊழியராகவும் நீங்கள் காட்சியளிப்பீர்கள்.
உங்கள் பதினொன்றாம் அதிபதி ஆறாம் இல்லத்திலிருக்கின்றபடியால், தாய்வழி மாமன் வர்க்கத்தினரால் ஆதாயம் அடைவீர்கள். மருத்துவ விடுதிகளை நடத்துவீர்கள். படிப்பதில் உங்களுக்கு பிரச்சினைகள் தோன்றக்கூடும். நீங்கள் பிறந்த இடத்தை விட்டு. வெகு தூரத்திற்கு சென்று வாழ்க்கையில் சுகபோகங்களைஅடைவீர்கள். நீங்கள் தனியாக சுயமாக பணிபுரிவதைக் காட்டிலும் மற்றவர்களின் கீழ் வேலை பார்த்தல் உங்களுக்கு நன்மை விளைவிக்கும். பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் உங்களை பெரிதும் பாதிக்காது,
உங்கள் பன்னிரண்டாம் அதிபதி பத்தாம் பாவத்தில் உள்ளபடியால், சமுதாயத்தில் நீங்கள் கலந்து உறவாடுபவர்கள் அனைவரும் மேல்வட்ட பிரிவினர் ஆவார். இதனால் உங்களது செலவினங்கள் அதிகரித்து உங்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்த பொருள் நஷ்டத்தினை தந்துவிடக்கூடும். தந்தையாரின் அரவணைப்பும் ஆசீர்வாதமும் மிகக்குறைவாக உங்களுக்கு இருக்கும். உங்களது மைந்தர்களுடன் சுமுகமான உறவினை நீங்கள் மேற்க்கொள்ளுதல் மிகக்கடினம்,