அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்குமா?
நம் முன்னோர்கள் சொன்னார்கள், குழந்தை பிறக்கவில்லையா? அரச மரத்துக்கு அடியில் இருக்கக்கூடிய விநாயகர் சுற்றுங்கள் அல்லது அரச மரத்தை சுற்றுங்கள் உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது படங்களில் நாம் பார்த்திருப்போம் அந்த வகையில் அரச மரத்தை சுற்றினால் குழந்தை பிறக்குமா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலம்.
அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்குமா?
நாம் சுவாசிக்கும்போது பிராண வாயு என்னும் ஆக்சிஜனை உள்ளி லிக்கிறோம். காலை நேரத்தில் வாக்கிங் செய்தால் அதிக ஆக்சிஜன் நமக்குக் கிடைக்கிறது.
தாவரங்கள் ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. அதிக அளவில் ஆக்சிஜனைத் தருகின்ற மரம் அரச மரம். ஆகவேதான் அது மரங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் அரசமரத்தைச் சுற்றி வந்தால் அதிக அளவில் ஃபிரஷ் ஆக்சிஜன் கிடைக்கும். அதன் மூலம் ரத்தம் சுத்தமாகும். அதனால் குழந்தை பிறப்புக்குச் சாத்தியக் கூறுகள் அதிகமாகிறது.
பல அறிவியல் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக ஆன்மிக சாயம் பூசிவிட்டனர். அவற்றுள் இதுவும் ஒன்று.