திருமணம் தடைபடுவதற்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் சரி லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டு அதிபதி 6 8 12 இல் மறையாமல் நல்ல ஸ்தானத்தில் இருக்க வேண்டும் அதாவது நல்ல ஸ்தானம் என்பது கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

அதேபோல குருவும் சுக்கிரனும் 6 8 12 இல் மறையாமல் பாவிகளின் சேர்க்கை இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவேளை குருவும் சுக்கிரனும் 6 8 12 இல் மறைந்தாலும் அல்லது பாவிகளின் உடைய சேர்க்கை இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
அதேபோல லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டை திருமண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய அந்த ஏழாம் வீட்டை சனியோ அல்லது செவ்வாயோ அல்லது ராகவோ அல்லது கேதுவோ பார்வை பெற்றாலோ அல்லது ஏழாம் வீட்டில் இந்த நான்கு கிரகங்களில் யாராவது ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் அல்லது நால்வர் யாரேனும் அமர்ந்திருந்தாலோ திருமணம் தாமதமாகும்.
- அதேபோல ராகு கேது தோஷம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்
- செவ்வாய் தோஷம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
- ஏழாம் வீட்டில் சனி இருந்தாலும் அல்லது ஏழாம் வீட்டை சனி பார்த்தாலோ திருமண தாமதமாகும்.
- ஒருவேளை லக்னத்தில் அல்லது இரண்டாம் வீட்டில் ராகுவோ கேதுவோ இருந்தால் திருமணம் தாமதமாகும்
மேலே சொன்ன அமைப்புக்கள் அத்தனையுமே திருமணம் தாமதமாகுவதற்கான ஜாதக ரீதியான பலன்கள் ஆகும்