கல்வியைப் பற்றி சொல்லக்கூடிய ஜாதக அமைப்பு
ஒருவருடைய ஜாதகத்தில் கல்வியைப் பற்றி சொல்வதற்கு இரண்டு இடங்கள் உள்ளன மிக முக்கியமாக இந்த இரண்டு இடங்களை மட்டுமே ஜோதிட ஆராய்ச்சியில் பல ஜோதிடர்கள் கண்டு பலன்களை சொல்கிறார்கள் அந்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தை பார்க்கும் போது அவர்களுக்கு படிப்பு எவ்வாறு இருக்கின்றது நன்றாக படிப்பார்களா அல்லது நன்றாக படிக்க மாட்டார்களா என்று ஒருவருடைய ஜாதகத்தை வைத்து ஒரு ஜோதிடர் எளிதாக கணிக்க முடியும்.

கல்வியைப் பற்றி சரியாக ஒரு ஜோதிடர் கணிக்க வேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
- 2ஆம் கட்டம்
- 4ஆம் கட்டம்
- புதன் பகவான்
மேலே சொல்லப்பட்ட அந்த மூன்று விஷயங்கள் ஒருவருடைய ஜாதகத்தில் படிப்பை பற்றி அறிந்து கொள்வதற்கு உதவுகின்றது
- முதலாவதாக ஒருவருடைய ராசி கட்டத்தில் இரண்டாம் இடம் நன்றாக இருக்க வேண்டும் அதாவது ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானங்களில் இரண்டாம் வீட்டின் அதிபதி இருக்கும்போது அந்த ஜாதகர் நிச்சயமாக ஆரம்ப கல்வி நன்றாக இருக்கும்.
2. இரண்டாவதாக ஒருவருடைய ஜனன ஜாதகத்தில் நான்காம் கட்டத்தை பார்க்க வேண்டும் இந்த நான்காம் கட்டத்தினுடைய அதிபதி உச்சமாகவோ அல்லது ஆட்சியாகவோ அல்லது நட்பு ஸ்தானங்களில் இருக்கும் போது அந்த ஜாதகர் என்னுடைய கல்லூரி காலம் மிக நன்றாக அமையும்.
3. அதுபோல ஒருவருடைய ஜாதகத்தில் புத்தியை சொல்லக்கூடியது புதன் பகவான் அதே போல படிப்புக்கு காரகத்துவம் நிறைந்த கடவுளும் புதன் பகவான் ஆதலால் ஒருவருடைய ராசி கட்டத்தில் புதன் பகவான் ஆட்சியாகவும் உச்சமாகவும் நட்பு ஸ்தானங்களில் இருக்கும் போது அந்த குழந்தை நன்றாக படிக்கும் ஒருவேளை பகை நீச்சம் இதுபோல இடங்களில் இருக்கும் போது படிப்புகளில் சிறுசிறு தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலே சொன்னது போல ஆட்சி உச்சம் நட்பு ஸ்தானங்களில் அந்த மூன்று கிரகங்களினுடைய அதிபதிகள் இருக்கும் போது நல்ல பலனையை அவர் கொடுப்பார் ஒருவேளை நீச்சமாகோ பகை வீடுகளிலோ இருக்கும்போது பலன்கள் சற்று மாறுபடும் அதாவது ஞாபகம் வருதே படிப்பில் தடைகள் பள்ளிக்கூடம் போகாமல் இருப்பது கல்லூரிக்கு சென்றாலும் படிக்காமல் ஊர் சுற்றுவது இதுபோல பல நிகழ்வுகளை அந்த குழந்தைகள் செய்து கொண்டு இருப்பார்கள்.