பாலவ கரணம் குணங்கள் ( பலன் ) மற்றும் காரகத்துவங்கள் /  paalava Karanam character and palan and kunangal in tamil

 

பாலவ கரணம் இந்த பாலவக்கருணத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய குணங்கள் எப்படி இருக்கும் நீங்கள் எப்படி வாழப் போகின்றீர்கள் உங்களுடைய கேரக்டர் மற்றும் குணாதிசயங்கள் என்ன என்பதை கர்ணத்தை வைத்து நம்மால் நிர்ணயம் செய்ய முடியும் அந்த வகையில் பாலவ கரணத்தில் பிறந்த நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

 

பாலவ கரணம் விலங்கு புலியாகும் அதாவது பாலவருணத்தில் பிறந்தவர்களுடைய குணங்கள் புலியினுடைய குணங்களை சம்பந்தப்பட்டே உங்களுடைய கேரக்டர் இந்த உலகத்தில் வாழும் வரை இயங்கிக் கொண்டிருக்கும்

 

 

பாலவ கரணத்தின் குணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்

 

பாலவக கரணத்தில் பிறந்தவர்கள் அதிகளவு சிற்றின்ப எண்ணத்தின் மீது ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்

 

பாலவ கரணத்தின் பிறந்தவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நிரந்தர செல்வம் உடையவர்களாகவும் செல்வத்தை சேர்க்கக் கூடியவர்களாகவும் அல்லது செல்வமிக்க குடும்பத்தில் பிறந்தவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள்.

 

இந்த பாலவ கரணம் பிறந்த ஒவ்வொருவரும் அனைவராலும் அதிகளவு வசீகரம் மிக்கவர்களாகவும் அல்லது அனைவராலும் விரும்பக் கூடியவர்களாக இருப்பார்கள்.

 

பாலவ கரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அழகானவர்களாகவும் அழகான உடல் தோற்றம் கொண்டவர்களாகவும் உடல் தோற்றத்தைக் கொண்டு அடுத்தவர்களை ஈர்க்கக் கூடியவர்களாக பெரும்பாலும் இருப்பார்கள்.

 

பாலவ கரணத்தில் பிறந்தவர்கள் அதிகளவு விளையாட்டு குணம் கொண்டவர்களாகவும் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள் அதேபோல அதிகளவு விளையாட்டு துறைகளில் இவர்கள் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது

 

அதேபோல பாலவக கரணத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய உறவினர்கள் மீது அதிக அன்பும் நேசிக்கக்கூடிய குணங்களையும் உடையவர்களாகவே இருப்பார்கள் இவர்களுக்கு அதிக அளவு உறவினர்களிடம் பேசுவது பழகுவது விளையாடுவது அல்லது வெளியூர் சென்று தங்களுடைய உறவுகளை நேசிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் அவர்களுக்கு இயல்பான குணங்களாக அமையும்.

 

பாலவ கரணத்தில் பிறந்தவர்கள் அதிக அளவு நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய எல்லோர்களுக்கும் உதவக்கூடிய மனப்பான்மை கொண்டவர்கள் அதாவது தன்னிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ பிறருக்கு உதவி வேண்டும் என்ற எண்ணம் பணக்காரர்களை விட மேலாக இவர்களுக்கு இருக்கும்

 

பாலவ கரணத்தில் பிறந்தவர்கள் அதிகளவு தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள் அதாவது எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் ஒன்றுக்கு நூறுமுறை யோசித்து ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் பின்வாங்க மாட்டார்கள் அதாவது எடுத்த முடிவாக இருக்கட்டும் சிந்திக்க கூடிய செயலாக இருக்கும் எதுவாக இருந்தாலும் பிறரை நம்புவதை விட தன்னை நம்பி எடுக்கக்கூடிய முடிவில் அதிக ஈடுபாடுகள் கொண்டவர்கள் அதாவது எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய குணங்களைக் கொண்டவர்களாகவே இவர்கள் திகழ்கின்றன.

 

நண்பர்களே பாலவ கரணம் என்றால் என்ன பாலவ கரணம் இதில் பிறந்தவர்களின் உடைய குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்த்தோம் இதைப் பொறுத்தே அவர்கள் வாழும் காலத்தில் இந்த குணங்களைக் கொண்டே வாழ்வார்கள் இதில் எந்த மாற்று சந்தேகமும் இல்லை.

 

அதேபோல பாலவ கரணம் இதில் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக புலியின் விலங்கு படத்தை அடிக்கடி பார்ப்பது அல்லது வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்து பார்வைக்கு படும்படி செய்வது இது போன்ற நிகழ்வுகள் அவர்களுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top