கரசை கரணம் பலன்கள் / Karasai Karanam palan in tamil

- கரசை காரணம் விலங்கு யானை ஆதலால் யானை புகைப்படத்தை நீங்கள் பார்ப்பது அல்லது யானைக்கு உணவு கொடுப்பது யானையைப் போற்றிப் பாதுகாப்பது இது போன்ற செயல்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கான மேன்மைகளை உண்டு பண்ணும்.
- இந்த கரசை கரணத்தில் பிறந்தவர்களுக்கு கற்பனை அதிகமாக இருக்கும் அதாவது கற்பனைத் திறன்கள் அதிகமுடையவர்களாக இருப்பார்கள்.
- எப்போதும் இந்த கரசை கரணத்தில் பிறந்தவர்கள் உங்கள் மனநிலை அலைபாயுந்த கொண்டு இருக்கும் உதாரணத்திற்கு உங்கள் மனநிலை ஒரு விஷயத்தை 10 விதமாக யோசிக்க கூடிய தன்மை உடையதாக இருக்கும்.
- எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் பேசிய சமாளிக்க கூடிய தன்மை உடையவராகவும் அல்லது எப்பேர்பட்ட விஷயமாக இருந்தாலும் பேசியே சாதிக்க கூடிய தன்மை கொண்டவராகவும் இந்த கரசை கரணம் பிறந்தவர்கள் இருப்பார்கள்
- அதிக அளவு அரசாங்கத் தொடர்பு உடையவர்களாகவே இந்த கரசை கரணத்தில் பிறந்தவர்கள் இந்த வாழ்க்கையில் திகழ்வார்கள்.
- எவ்வளவு பெரிய எதிர்ப்புகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தைரியம் தன்னம்பிக்கை மனோ பலம் உடையவராக இந்த கரசைக் கரணத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
- எப்பேர்ப்பட்ட விஷயமாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செயல்படக்கூடியதில் நீங்கள் வல்லவர்கள்.
- அதேபோல இந்த கரசை கரணத்தில் பிறந்தவர்கள் உங்களோடு பழகக்கூடிய அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.