கன்னி லக்னம் கன்னி ராசி பிறந்தவர்கள் எந்த வயதிற்கு பிறகு வளர்ச்சி அடைவார்கள்
கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எப்போது எந்த வயதிற்கு பிறகு மாறும் என்று சந்தேகம் உங்களுக்குள் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது.
வாழ்க்கையில் பல இன்பங்களை பார்த்து விட்டோம் பல துன்பங்களையும் பார்த்து விட்டோம் எப்போது என் வாழ்க்கை ஒரு நல்ல முன்னேற்றத்தை நோக்கி நகரும் என்ற எண்ணம் உங்களுக்குள் எழுந்து கொண்டிருக்கும் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையும் மாறும் அது எந்த வயதிற்கு என்பதை விரிவாக பார்க்கலாம்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுடைய தனஸ்தானதிபதியாகிய சுக்கிரனும் லாப ஸ்தான அதிபதியாகிய சந்திரனும் 6 8 12 இல் மறையாமல் ஒரு நல்ல இடத்தில் கேந்திரத்திலோ அல்லது திரிகோண ஸ்தானத்திலோ இருக்கும்போது உங்களுடைய வாழ்க்கைத் தரம் நிச்சயமாக ஒரு நல்ல வருமானத்தையும் லாபகரமான வீடு கார் வாகனம் பல சுகபோக வாழ்க்கைகளையும் கொடுத்து நல்ல நிலைமைக்கு கொண்டு செல்வார்.
ஆனால் இதெல்லாம் எந்த வயதிற்கு பிறகு நடக்கும் என்று சந்தேகம் உங்களுக்குள் இருக்கும் ஆம் மேலே சொன்ன அத்தனை விஷயங்களும் 42 வயதிற்கு பிறகு உங்களுடைய வாழ்க்கையில் நடக்கப் போகிறது