ஜாதகம் பார்ப்பது எப்படி / Jathagam parpathu epadi.?

 

ஜாதகம் பார்ப்பது எப்படி / Jathagam parpathu epadi.?

ஒருவருடைய ஜாதகத்தை கணிப்பதற்கு தேவைப்படுகின்ற முக்கியமான சில அம்சங்களையும் முக்கியமான சில விஷயங்களையும் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் இந்த பதிவை முழுமையாக படிக்கும் பட்சத்தில் ஒருவருடைய ஜாதகத்தை எந்தெந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு கணிப்பது என்பதை தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்

  • முதலில் ஜாதகம் பார்ப்பதற்கு பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும்
  • ஜாதகம் பார்ப்பதற்கு பிறந்த நேரம் எவ்வளவு முக்கியமோ அதை விட மிக முக்கியமானது பிறந்த தேதி சரியாக தெரிந்திருக்க வேண்டும்
  • பிறந்த நேரம் சரியாகத் தெரியும் பட்சத்தில் பிறந்த தேதியும் சரியாகத் தெரியும் பட்சத்தில் எந்த ஊரில் பிறந்தீர்கள் என்று இந்த மூன்று விஷயங்களும் மிக மிக முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும்
  • மேலே சொல்லப்பட்ட இந்த மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவருடைய ஜாதகத்தை நீங்கள் ஆன்லைனில் மூலமாக கூட ராசி கட்டம் மற்றும் நவாம்சத்தை எடுக்க உங்களால் முடியும் அதை அடிப்படையாகக் கொண்டு நாம் எப்படி ஒரு ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ஜாதகம் பார்ப்பதற்கு தேவைப்படுகின்ற முக்கியமான சில ராசி கட்டங்களை தெரிந்து கொள்வோம்

  • ஒருவருடைய ஜாதகத்தை முதலில் நீங்கள் பார்த்தவுடன் லக்னத்தை பார்க்க வேண்டும் லக்னத்தினுடைய ஓனர் எந்த கட்டத்தில் இருக்கின்றார் என்பதை முதலில் பார்க்க வேண்டும் அதாவது லக்னப்பாவம் ஒருவருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது அந்த வகையில் லக்ன கட்டத்தின் அதிபதி 6 8 12 இல் மறையாமல் சுப கிரகங்களின் பார்வையோ அல்லது சுப கிரகங்களினுடைய சேர்க்கையோ இருந்தால் அந்த ஜாதகம் முதலில் பலம் பெறும் ஆதலால் நீங்கள் முதலில் ஒரு ராசி கட்டத்தை பார்த்தவுடன் லக்னாதிபதி எங்கு உள்ளார் என்பதை தெளிவாக பார்க்க வேண்டும்.
  • அடுத்ததாக பிறந்த குழந்தையாக இருந்தால் இரண்டாம் இடத்தை பார்க்க வேண்டும் அது கல்வியை குறிக்கும் அதேபோல வளர்ந்தவர்கள் அல்லது வேலைக்கு செல்லக்கூடியவர்களாக இருந்தால் அல்லது குடும்பஸ்தர்களாக இருந்தால் இரண்டாமிடம் என்பது வருமானத்தையும் வாக்கு ஸ்தானங்களையும் குறிப்பிடும் அந்த வகையில் நீங்கள் ஜாதகத்தை பார்க்கும்போது லக்னத்திற்கு அடுத்தபடியாக சிறுபிள்ளையாக இருந்தால் கல்விக்கு இரண்டாம் வீட்டு அதிபதி 6 8 12 இல் மறையாமல் சுப கிரகங்களின் சேர்க்கை இருக்கும் போது படிப்பு நன்றாக இருக்கும் பெரியவர்களாக இருக்கும் பட்சத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி 6 8 12 ல் மறையும் போது வருமானம் சற்று தடைப்படும் அதுவே கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ இருக்கும்போது உங்களுக்கு வருமானம் அந்த தசா புத்தி காலங்களில் மிகவும் நன்றாக இருக்கும்.
  • அடுத்ததாக ஐந்தாம் இடத்தை நாம் பார்க்க வேண்டும் ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு என்பது குழந்தைகளை குறிக்கக்கூடிய இடம் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா என்பதை ஐந்தாமிடத்தை மையமாக கொண்டு நாம் பலனை சொல்லலாம். அதாவது ஐந்தாம் வீட்டு கட்டத்தில் பாவ கிரகங்களினுடைய சேர்க்கை அல்லது பாவ கிரகங்கள் அந்த ஐந்தாம் வீட்டில் இருக்கும்போது குழந்தை பிறப்பது தாமதமாகும் ஒருவேளை ஐந்தாம் வீட்டு அதிபதி 6 8 12 இல் மறைந்தாலும் அல்லது பாவ கிரகங்களினுடைய சேர்க்கை இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்.
  • அடுத்து ஜாதகம் பார்க்கும்போது லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்க்க வேண்டும் இந்த ஏழாம் வீட்டு என்பது திருமணத்தை குறிக்கக்கூடிய வீடாகும் ஆதலால் ஒருவருக்கு திருமணம் எளிதில் நடக்குமா அல்லது தடைகளுக்கு பிறகு திருமணம் நடக்குமா? அல்லது தாமதமாக திருமணம் நடக்குமா? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஏழாம் வீட்டு அதிபதியையோ அல்லது ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய் ராகு கேது சேர்க்கையோ பார்வையோ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் ஏனென்றால் ராகு கேது சனி செவ்வாய் இவர்களுடைய பார்வையோ சேர்க்கையோ ஏழாம் இடத்தில் இருக்கும் போது அவருக்கு திருமணம் நிச்சயமாக தாமதமாக நடக்கும் என்பதை நீங்கள் கணிக்கலாம் ஒருவேளை ஏழாம் வீட்டில் எந்த கிரகங்களும் இல்லை என்றால் ஏழாம் வீட்டு அதிபதி எங்கு இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் அதாவது ஆறு எட்டு பன்னெண்டில் மறையாமல் பாவ கிரகங்களினுடைய சேர்க்கை இல்லாமல் பலம் பெற்று இருக்கும்போது ஒருவருக்கு திருமணம் சீக்கிரமாக நடக்கும் ஒருவேளை பாவ கிரகங்களுடைய சேர்க்கை இருக்கும் பட்சத்தில் திருமணம் தாமதமாகவும் தடைப்பட்டும் நின்று நடக்கும் என்பதை நாம் பலனாக சொல்ல வேண்டும்.
  • அடுத்ததாக லக்னத்தில் இருந்து பத்தாம் வீட்டை நாம் எடுக்க வேண்டும் இந்த பத்தாம் வீடு என்பது தொழில் ஸ்தானத்தை குறிக்கும் ஒருவருக்கு தொழில் செய்து முன்னேறுவார்களா அல்லது தொழில் அவர்களுக்கு அமைவது கடினமாக உள்ளது என்பதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த பத்தாமிடம் மிக மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது அதாவது பத்தாம் வீட்டில் சனியோ செவ்வாயோ ராகுவோ கேதுவோ இருக்கும் பட்சத்தில் நிலையான வேலை கிடைப்பது அரிதாக அமைகிறது அதாவது நிலையான வேலை அவர்களுக்கு கிடைக்காது. ஒருவேளை வேளையில் இருந்தாலும் வேறு வேலை தேடலாமா அல்லது வேறு வேலைக்கு போகலாமா என்று அவர்கள் மனம் அவர்களை குழப்பிக் கொண்டே இருக்கும் ஆகையால் பத்தாம் இடத்தில் எப்போதும் பாவ கிரகங்கள் உடைய சேர்க்கை இல்லாமல் இருக்கும்போது வளர்ச்சிகள் நன்றாக இருக்கும்.
  • அடுத்ததாக பதினோராம் வீட்டை நாம் பார்க்க வேண்டும் பதினோராம் வீடு என்பது லாப ஸ்தானத்தை குறிப்பதால் ஒருவருடைய வாழ்க்கையில் வளர்ச்சிகளும் பேர் புகழ் அந்தஸ்துகளும் முன்னேற்றங்களும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பதினோராம் வீடு மிக மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது ஆகையால் ஒருவருக்கு 11ஆம் வீட்டில் உச்ச கிரகமும் ஆட்சி கிரகமோ பெற்றிருக்கும் போது அவர்களுடைய வாழ்க்கை நிச்சயமாக பிறக்கும்போது இருந்ததை விட வளரும் போது அவர்களுடைய வாழ்க்கையில் மேம்பட்டு வளருவார்கள் என்பதை அவர்கள் வாழும் போதே உணர முடியும் ஆகையால் பதினோராம் இடத்தில் பாவ கிரகங்களின் உடைய சேர்க்கை இல்லாமல் உச்சமான கிரகமோ ஆட்சியான கிரகமோ சுப கிரகமோ இருந்தால் உங்கள் ஜாதகர் நிச்சயமாக 90 70 வயதுகளில் நல்ல நிலைமையில் இருந்து வாழ்ந்து மறைவார்கள் என்பதை எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
  • அதேபோல 12ஆம் இடம் என்பது விரைய ஸ்தானம் என்று சொல்வார்கள் அந்த 12ஆம் வீட்டு அதிபதி லாபஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது தொழில் ஸ்தானத்தில் இருந்தாலோ அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தாலும் நிச்சயமாக நீங்கள் 100 ரூபாய் சம்பாதித்தால் 50 ரூபாய் விரயமாகும் என்பதை நீங்கள் எளிதில் சொல்ல  சொல்லிவிடலாம்.

ஒருவருக்கு ஜாதகம் பார்க்க வேண்டுமென்றால் மேலே சொன்ன பலனையே நிகல் எடுத்து அவர்களுக்கு எளிதாக சொல்லலாம் அதற்கு நிச்சயமாக ஜாதகத்தை கற்று இருக்க வேண்டும். அதாவது ஜோதிடத்தை கற்றுக் கொண்டால் மட்டுமே உங்களால் ஒருவருடைய ஜாதகத்தை கணிக்க முடியும் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றங்கள் எப்படி இருக்கும்? அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயருமா என்பதை எல்லாம் நீங்கள் ஒருவருடைய ஜாதகத்தை பார்த்து எளிதாக பலனை சொல்ல முடியும்.

மேலே  சொன்ன பலன்கள்  மிக மிக முக்கியமாக இன்றளவும் ஜோதிடர்களால் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது அது ஆதலால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் கிரகங்களின் உடைய காரகத்துவத்தை தெரிந்தால் மட்டுமே எளிதாக பலன்களை கணிக்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top