தனுசு லக்னம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் எந்த வயதிற்கு பிறகு வளர்ச்சி அடைவார்கள்
தனுஷ் லக்னத்தில் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுடைய வாழ்க்கை எந்த வயதிற்கு பிறகு ஒரு நல்ல முன்னேற்றத்தை நோக்கியும் வளர்ச்சிகளை நோக்கியும் செல்லும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுடைய தனம் ஸ்தான அதிபதியாகிய சனி பகவானும் சரி லாப ஸ்தான அதிபதியாகிய சுக்கிரனும் சரி இருவரும் 6 8 12 இல் மறையாமல் நல்ல ஸ்தானங்களில் இருக்கும் போது உங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகளும் பணவரவும் நன்கு நல்ல நிலையில் அமையும்.
இருந்தாலும் தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுடைய வருமானம் இரண்டாம் இடம் ஆகிய சனியினுடைய வீடாக அமைவதால் சற்று வருமானம் தடைகளுக்குப் பிறகு உங்களிடம் வந்து சேரும் அதுவும் நீங்கள் அதிக உழைப்புகளை போடும்போது மட்டுமே சனீஸ்வரன் உங்களுக்கு வருமானங்களை கொடுப்பாரே தவிர நீங்கள் எளிமையான ஒரு காரியத்தை செய்து உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியாது.
அந்த வகையில் தனுஷ் லக்னத்தில் பிறந்தவர்களாக நீங்கள் இருந்தாலும் சரி அல்லது தனுசு ராசியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய வயது 32 ஐ கடந்த பிறகு ஒரு நல்ல முன்னேற்றத்தை நோக்கி நகரும்