கணிதப் பொருத்தம் / kanitham porutham

கணிதப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல், புருஷனுடைய நட்சத்திரம் எண்ணவும், எண்ணிவந்த தொகையை 7-ல் பெருக்கி 28-ல் வகுக்கவும். மிச்சம் வராமலிருந்தால், 28 என்று வைத்து கொள்ளவும். இப்படியே ஆண் நட்சத்திரம் முதல் பெண் நட்சத் திரம் வரையில் எண்ணி 7-ல் பெருக்கி 28-ல் வகுத்து மிச்சத்தை எடுத்து வைக்கவும். இப்படி வந்த மிச்சங்களில் ஆணுடைய மிச்சம். பெண்ணுடைய மிச்சத்தை விட அதிகமானால் உன்னதம், இரண்டும் சமமானால் மத்தியம்; பெண்ணினது அதிகமானால் சுகமாகும். இந்தப் பொருத்தம் ஆண், பெண் இருவருடைய ஆயுளைக் கணிக்க ஒரு சுலபமான முறையாகும். ஆண் பெண்ணைவிட அதிக காலம் வாழ்வது என்பதுதான் நமது நாட்டின் பண்பு அதற்காக ஏற்பட்ட முறையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top