மேஷம் ராசி டிசம்பர் 2025 மாதம் ராசி பலன் / Mesham Rasi 2025 December Month Rasi palan
- மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த டிசம்பர் மாத ராசிபலன் எப்படி இருக்கும் என்றால் உங்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படவும் ஏதோ ஒரு பயம் படபடப்பு மற்றும் உங்களுடைய வாழ்க்கைத் துணைவியால் அல்லது வாழ்க்கைத் துணையால் மனக்கஷ்டங்கள் ஏற்படக்கூடிய நாளாகவே இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது அது மட்டுமல்லாமல் பொருட்கள் இழப்பு உங்கள் தந்தைக்கு நோய் தாக்குதல் போன்ற விஷயங்கள் ஏற்படும் அதிக வாய்ப்புகள் இந்த மாதம் உள்ளது.

- இந்த மாதம் பணத்தட்டுப்பாடுகளும் பண செலவுகளையும் நீங்கள் குறைத்துக் கொள்வது நல்லது உங்களுடைய நற்பயிருக்கு களங்கம் விளைவிக்கக் கூடிய செயல்கள் இந்த மாதம் நடக்கக்கூடிய மாதமாக அமையும் அதேபோல வாகனங்களில் பயணிக்கும் போது பார்த்து பயணிக்க வேண்டும் மருத்துவ செலவுகள் கைகூடும். தேவையில்லாத பிரச்சினைகள் தொலைபேசி வாயிலாக உங்களிடம் வந்து சேரும்.
- கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் இந்த மாதம் ஏற்படும் அதனால் உணவுகளில் மிக கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது பார்த்து பழக வேண்டும் ஏனென்றால் அது பகையாக மாறும் மற்றும் வீண் அலைச்சல்கள் ஏற்படக்கூடிய மாதமாகவே இந்த மாதம் உங்களுக்கு அமைகிறது.











