ராகு போல் கொடுப்பார் இல்லை கேது போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்..
ஒருவரது ஜாதகத்தில் ராகு கேது தோஷம் என்பது கட்டம் 1 கட்டம் 2 அதேபோல கட்டம் 7 அல்லது 8 இதில் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் அவர்களுக்கு ராகு-கேது தோஷம் இருப்பதாக அர்த்தம்
ஒருவருக்கு ராகு கேது தோஷம் இருந்தால் திருமணத்திற்கு அதே ராகு-கேது இருக்கக் கூடியவர்கள் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல ஜோதிடர்கள் கூறி வருகின்றன
ராகு கேது இருக்கக் கூடியவர்களுக்கு திருமணம் தாமதமாக தான் நடக்கும் சிலருக்கு திடீரென்று திருமணம் நடந்து விடும்
இந்த ராகு-கேது தோஷம் என்பது நம் முன்னோர்களால் ஏற்பட்ட பாவத்தை நாம் சுமப்பதாக பல ஜோதிடர்கள் சொல்லப்பட்டு வருகின்ற உண்மை. அப்படிப்பட்ட ராகு-கேது தோஷம் 100 குழந்தைகளில் சுமார் 50 குழந்தைகளுக்கு இந்த ராகு-கேது தோஷம் இருப்பதாக ஜோதிட ஆராய்ச்சி சொல்கின்றன
இப்படி ராகு-கேது இருக்கக்கூடியவர்கள் ராகு பகவானையும் கேது பகவானையும் தினம் தோறும் வணங்கி வந்தால் பல நன்மைகள் நடக்கும் என்பது நிதர்சனமான உண்மை
அதே போல ராகு கேது இருப்பவர்களுக்கு திடீரென்று யோகம் அடிக்கும் ஏழையாகவே இருப்பார்கள் திடீரென்று பணக்கார யோகம் அவர்களை அடித்து விடும் அதாவது ராகு போல் கொடுப்பார் இல்லை கெடுப்பாரும் இல்லை என்பார்கள் திடீர் யோகம் தரக்கூடிய யோக காரர்களாக இந்த ராகு-கேது ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்