சில பேர் சொல்வார்கள் என் வீட்டில் பூஜை போட்டால் தெய்வசக்தி நிறைந்த சாந்தம் என் மனதிற்கு கிடைக்கிறது என்று. அதனாலேயே அவர்கள் வீட்டில் தினம்தோறும் அவர்கள் பூஜை போடுவார்கள் அதனால் பல நன்மைகளையும் அவர்கள் அடைவார்கள்
என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் கடவுளுடைய அனுகிரகம் இல்லை என்றால் ஒரு மனிதனால் சந்தோசமாக வாழ முடியாது.. அப்படிப்பட்ட தெய்வீக சக்தி நம் வீட்டில் நிறைந்து இருக்கின்றது என்பதை நாம் எப்படி கண்டறிய போகின்றோம் என்பதை பற்றிதான் இன்று இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
முதலில் நம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு நம் பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். தினம்தோறும் நம் பூஜை அறையில் இருக்கக்கூடிய இறைவனை பிரார்த்தனை செய்ய தினமும் பூஜைகள் செய்ய வேண்டும்
அப்படி தினம் தோறும் நாம் பூஜைகள் செய்யும்போது ஒரு அரை மணி நேரம் பூஜைகள் முடித்துவிட்டு உங்கள் வீட்டை உற்றுப்பாருங்கள் தெய்வீக சக்தி நிறைந்த மனம் உங்கள் மனதிற்குள் வீசும் அப்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம் இறைவன் நம் வீட்டில் வாசம் கொண்டிருக்கிறார் என்பதை
சில வீடுகள் என்னதான் பூஜை புனஸ்காரம் செய்தாலும் அந்த லட்சுமிகடாட்சம் அவர்கள் கண்ணுக்குத் தெரியாது காரணம் ஏதோ ஒரு குல தெய்வ குத்தம் அவர்களுக்கு இருக்கும்
ஆனால் நாம் நம்முடைய குல தெய்வத்தின் புகைப்படமும் நம் வீட்டில் வைத்து பூஜை செய்யும்போது. உங்கள் வீட்டை நீங்களே உற்றுப் பாருங்கள் அந்த தெய்வத்தினுடைய வாசம் உங்கள் மனசுக்குள் வீசும் அதை உங்களால் கண்கூடாக உணர முடியும். அப்போது நீங்களே முடிவு செய்து விடுவீர்கள் கடவுள் நம்மோடு தான் இருக்கின்றார் என்பதை. அந்த தருணத்தில் கடவுளை உங்களுக்கு உணர்த்துவார்