சிம்மம் லக்னம் சிம்மம் ராசி பிறந்தவர்கள் எந்த வயதிற்கு பிறகு வளர்ச்சி அடைவார்கள்
சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எந்த வயதிற்கு பிறகு நல்ல வளர்ச்சிகளை நோக்கி நகரம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுடைய லாப ஸ்தான அதிபதி புதனாகவும் தனஸ்தானதிபதி புதனாகவும் அமைவதால் இரண்டுமே ஒரே கிரகம் என்பதால் புதன் உங்களுடைய ராசி கட்டத்தில் ஆறு எட்டு பன்னண்டில் மறையாமல் நல்ல ஸ்தானத்தில் இருந்தால் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கை ஒரு மிக பெரிய மாற்றத்தை நோக்கி நகரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் வேண்டாம்.
அந்த வகையில் சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை எந்த வயதிற்கு பிறகு மாறும் என்று நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே பதில் 38 வயதிற்குப் பிறகு உங்களுடைய வாழ்க்கை நல்ல முன்னேற்றத்தின் நோக்கி நகரும்