ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்கள் எந்த வயதில் வளர்ச்சி அடைவார்கள்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் எந்த வயதிற்குப் பிறகு உங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகளும், செல்வ செழிப்பும் வளரும் என்பதை பற்றிய பதிவுதான் இது.
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் அமைவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் நீங்கள் ரிஷப லக்னத்தில் பிறந்திருந்தால் உங்களுடைய வளர்ச்சி சற்று தாமதமாகும்.

ரிஷப லக்னத்திற்கு 11ம் வீடு லாபஸ்தானம் இந்த வீட்டினுடைய அதிபதி குரு இவர் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்வாரா என்றால் அது ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றன ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒரே கிரகம் சனீஸ்வரன் மட்டுமே ஆகையால் உங்களுக்கு 35 வயதிற்குப் பிறகு வாழ்க்கையில் வளர்ச்சிகளும் மாற்றங்களும் நிகழும்.
குறிப்பாக ரிஷப லக்னம் கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 35 வயதிற்கு பிறகு திருமணம் நடந்த பிறகு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய வளர்ச்சிகளை உங்களால் காண முடியும்