ஒரு மனிதனுக்கு தலைவலி (migraine headache) என்பது பலவகையாக இருக்கும் ஒற்றைத் தலைவலி இரட்டைத்தலைவலி பின் தலைவலி பின் மண்டை வலி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் தலைவலி என்பது மிகவும் முக்கியமான ஒரு வலியாகும். மைக் ரெயின் என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம்.
இந்த ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படுகின்ற மைக்ரைன் ஒருவருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கும் போது அதிகமான தலைவலி ஏற்படுகிறது. அப்படி தலைவலி வந்தவர்கள் மருத்துவரை அணுகி நல்ல மருத்துவம் எடுத்துக் கொள்வதன் மூலமாக அவர்களுக்கு தலைவலி குணமாகிறது. குறிப்பாக சிலர் 15 நாட்கள் மருந்துகள் எடுத்தால் போதும் சிலர் ஒரு மாதம் சிலர் மூன்று மாதம் சிலர் ஆறு மாதம் இன்னும் சிலர் ஒரு வருடம் வரை இந்த மருந்துகளை எடுக்க வேண்டியதாக இருக்கும் அப்படி இருக்கும்போது மைக்ரைன் (migraine headache) என்று சொல்லப்படுகின்ற தலைவலி முற்றிலும் குறையவில்லை என்றாலும் அவ்வபோது தீர்வை அது தரும். முற்றிலும் மைக்ரைன் பிரச்சினை குறைவதற்கும் மைக்ரைன் பிரச்சினை வராமல் தடுப்பதற்கும் நாம் என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்தடுத்து நாம் பார்ப்போம்.
1. மைக்ரைன் என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் தலைவலி முதலில் ஒருவருக்கு வருவதற்கு காரணம் மன அழுத்தம் யாருக்கெல்லாம் மன அழுத்தம் டென்ஷன் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு ஒற்றைத் தலைவலி என்று சொல்லக்கூடிய மைக்ரைன் நிச்சயமாக வரும்.
2. யாரெல்லாம் அதிகமாக யோசிக்கிறார்களோ யாரெல்லாம் அதிகமாக யோசித்து தன்னுடைய தூக்கத்தை இழக்கின்றார்களோ அவர்களுக்கு மைக்ரைன் என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் தலைவலி நிச்சயமாக வரும்.
3. அதிகமாக குளிர்பானங்கள் சாப்பிடக்கூடிய அவர்களுக்கும், அதிகமாக தலைக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்கின்றவர்களுக்கும், இந்த மைக்ரைன் என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் தலைவலி நிச்சயமாக வரும்.
4. பொதுவாக இந்த ஒற்றைத் தலைவலி என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுத்துகிறது காரணம் நான்கு செவுற்றுக்குள் அடைந்து கிடப்பது அதனால் ஏற்படுகின்ற மன அழுத்தம் தாங்காமல் அதிக யோசனை கொள்வதால் பெண்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.
ஒற்றைத் தலைவலி என்று சொல்லக்கூடிய மைக்ரேன் வராமல் தடுப்பதற்கான வழிகள்:
பொதுவாக மைக்ரைன் ஏற்படுகின்ற தலைவலி என்று நாம் ஒரு மருத்துவரை சென்று பார்த்தால் அவர் முதலில் கேட்கக் கூடிய விஷயம் உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா டென்ஷன் இருக்கா அப்படின்னு ஒரு வார்த்தை கேட்பார்கள் அதற்கு முக்கிய காரணம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் இருக்கும் அதனால் முதலில் பாதிக்கப்படுவது நம் மூலையில் இருக்கக்கூடிய நரம்புகள் அது வீக்காகி நமக்கு ஒற்றைத் தலைவலியாக பிற்காலத்தில் நமக்கு ஏற்படுகிறது. அதனால் நீங்கள் நிச்சயமாக உங்களுடைய யோசனை டென்ஷன் மன அழுத்தம் இந்த மூன்றையும் உங்கள் வாழ்க்கையில் குறைத்துக் கொள்ள வேண்டும் அப்படி குறைத்துக் கொண்டால் உங்களுக்கு இந்த ஒற்றை தலைவலி வராது.
இரண்டாவதாக குளிர்பானங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் இதனால் உங்களுக்கு ஒற்றைத் தலைவலி அதிகமாக வரலாம் குளிர்பானங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் sound அதிகமாக இயர் போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் இப்படி செய்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
குறிப்பாக ஒற்றைத் தலைவலி ஏற்பட்டவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகிலையோ அல்லது உங்கள் மாவட்டத்தில் எங்காவது நியூராலஜி என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் தலைவலிக்கு இன்றே இருக்கக்கூடிய மருத்துவர் இருந்தால் அவரை அணுகி உங்களால் முடிந்த சிடி ஸ்கேனை எடுத்து தெளிவுபடுத்திக் கொள்ளவும். ஒன்றுமில்லை என்று ரிப்போர்ட்டில் வந்தால் அவர் கொடுக்கக்கூடிய மருந்துகளை எடுத்துக்கொண்டு பிறகு மேற்கொண்டதை நீங்கள் படித்தது போல நடந்து கொண்டாலே போதுமானது உங்களுக்கு ஒற்றைத் தலைவலி முற்றிலும் வராது.