பொதுவாக சனியினுடைய பார்வை ஒருவர் மீது விழும் போது அவர்களுடைய நல்ல கர்மாவை பொறுத்தே அல்லது அவர்களுடைய கெட்ட கர்மாவை பொறுத்தே அவர்கள் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நடைபெறும்.
சரி இப்போது சனி என் மனதை குளிர வைக்கக் கூடிய மஹா மந்திரத்தை பார்க்க போகின்றோம்.
மந்திரம்
இச்சகம் வாழ இன்னருள் தாதே..
இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் சொல்லிக் கொள்ள வேண்டும் அப்படி இந்த மந்திரத்தை தினமும் காலை சொல்லி வந்தால் அன்றைய பொழுது சனியினுடைய பார்வை நம் மீது நல்லதாக விழும் என்று ஒரு ஐதீகம் உண்டு. அதுமட்டுமல்லாமல் எப்போதெல்லாம் உங்களுக்கு கஷ்டம் வருகிறதோ, எப்போதெல்லாம் உங்களுக்கு கவலை வருகிறதோ, எப்போதெல்லாம் உங்கள் மனம் எதையோ நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலமாக நிச்சயமாக உங்கள் மனதில் இருக்கக்கூடிய அத்தனை கஷ்டங்களும் மன வேதனைகளும் தீரும் என்பது நிச்சயம்.
பொதுவாக இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் . தமிழர்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், யாராக இருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம் . இதனால் அவர்களுக்கு நல்லது நடக்குமே தவிர எந்த விதத்திலும் கேட்டது நடக்காது. அதனால் தாராளமாக இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். அதுமட்டுமல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் இதற்கு எந்த விதிவிலக்கும் இல்லை
உங்களால் முடிந்தால் சனிப் பெயர்ச்சி நடக்கும் போது திருநள்ளாற் சென்று சனீஸ்வரனை வேண்டி மனதார வழங்குவதன் மூலமாக உங்களுடைய அத்தனை பாவங்களும் தீர்ந்து உங்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏறும் என்பதும் ஐதீகம் இன்றும் தமிழ் அளவில் பெரும்பாலான மக்கள் திருநள்ளார் சென்று சனீஸ்வரரை வணங்கி வருகின்றனர் இதனால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல விதமான பலன்களை நடந்து வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை