குரு + கேது கிரக சேர்க்கை பலன்
உங்களுடைய 12 ராசி கட்டங்களில் குரு கேது கிரக சேர்க்கை எங்கு இருந்தாலும் கீழே சொல்லப்பட்டுள்ள பலன்கள் பெரும்பாலும் உங்களுக்கு பலன் அளிக்கக் கூடிய வகையிலேயே குருவும் கேதுவும் செய்வார்கள் வாருங்கள் குருவும் கேதுவும் இணைந்து என்ன பலன்களை உங்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதை கீழே பார்க்கலாம்

- சாஸ்திரம் ஜோதிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
- ஆராய்ச்சி பணிகளிலும் சட்டப் பணிகளிலும் ராணுவ பணிகளிலும் அதிக ஈடுபாடுகள் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- உதவும் மனப்பான்மை உங்களுக்கு இயல்பாகவே அதிகமாக இருக்கும் அடுத்தவர்களை பற்றி புறம் பேசக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- பலவகையான திறமைகளைக் கொண்டவர்களாக திகழ்வீர்கள். அதுமட்டுமல்லாமல் எல்லா தொழில்களையும் எல்லா விஷயங்களையும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள்.
- கால்நடை வளர்ப்பதிலும் கால்நடைகளை பராமரிப்பதிலும் கால்நடைகள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக திகழ்வீர்கள்.
- தாங்கள்தான் எந்த ஒரு காரியத்தையும் முன் நின்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் அந்த எண்ணத்திற்கு போல் உங்களை அனைத்து விஷயங்களிலும் முன் நின்று செய்ய வைக்கும் ஆற்றலை இந்த கிரகங்கள் செய்யும்.