குரு , ராரு சேர்க்கை பலன் / Guru Rahu Serkai palangal in Tamil
12 ராசி கட்டங்களில் ராகவும் குருவும் சேர்ந்து எங்கு இருந்தாலும் அவர் கொடுக்கக்கூடிய பலன்களை நிச்சயமாக நமக்கு கொடுப்பார் அதில் எந்தவிதமான மாற்றுப்படுத்தும் கிடையாது இந்த பதிவில் நம்முடைய 12 ராசி கட்டங்களில் ராகுவும் குருவும் இணைந்து இருக்கும் போது என்ன பலன்களை கொடுப்பார் என்பதை பார்க்கலாம்

- குருவும் ராகவும் இணைவு என்பது கல்வியில் ஆர்வத்தை கொடுத்து நல்ல முறையில் கல்வித் தகுதியை வளர்க்கக்கூடிய வேலைகளையும் செயல்களையும் குருவும் ராகவும் சேர்ந்து ஒருவருடைய ஜாதகத்தை வழி நடத்துவார்.
- உங்களுடைய வாழ்க்கையில் பொருட்களை சேர்ப்பதிலும் தங்கம் வாங்குவதிலும் செல்வங்களை சேர்ப்பதிலும் சொத்துக்களை சேர்ப்பதிலும் ராகுவும் குருவும் இணைவு என்பது செயல்களை வழிநடத்தும்.
- குருவும் ராகவும் இணைவு என்பது சாஸ்திரங்களை நம்ப வைக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களை ஒருவருடைய ஜாதகருக்கு கற்றுக் கொடுத்து அவர்களை மென்மேலும் வளர வைக்கக் கூடிய வேலைகளை இந்த இருவரும் செய்வார்கள்
- கலைத்துறைகளில் அதிக ஆர்வங்களை கொடுத்து உங்களை அந்த துறைகளிலும் ஈடுபடுத்தி ஒரு வளர்ச்சியை கொடுக்கும்.
- மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை பேசக்கூடிய எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- ஒருவரினுடைய குணமறிந்து பழகக்கூடிய தன்மை இவர்களுக்கு அரிதாகவே இருக்கும் அதாவது ஒருவர் பேசும் போதே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று புரிந்து கொள்ளும் அறிவு திறமை இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.