உடல் எடையை அதிகரிக்க என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம் பொதுவாக உடல் எடை என்பது 20 வயதிற்கு மேல் ஏற கூடிய விஷயம் 20 வயதிற்கு உட்பட்ட எடை அதிகரித்தால் நிச்சயமாக மருத்துவரை அணுகி என்னவென்று நாம் பார்க்க வேண்டும். சரி 20 வயதிற்கு மேல் உடல் எடை கூடாதவர்கள் பார்ப்பதற்கு மெலிதாக இருக்கக்கூடியவர்கள் என்னென்ன செய்தால் உடல் எடை கூடும் என்பதை பற்றி பார்க்கலாம்
உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்:
1. உடல் எடை அதிகரிக்க முதலில் நல்ல சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் உதாரணத்திற்கு காய்கறி கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் வாரத்திற்கு இரண்டு முறை மூன்று முறை மாமிசத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்
2. தினம்தோறும் உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை அதிகரிக்கும் மற்றும் பார்ப்பதற்கு கட்டுமஸ்து உடலை பெற்ற தேகம் போல் காட்சியளிக்கும் ( உடல் எடை குறைப்பதற்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் உடல் எடை அதிகரிப்பதற்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் உடற்பயிற்சி செய்வதால் நல்ல பசி எடுக்கும் அதனால் உடல் பார்ப்பதற்கு ஆரோக்கியம் நிறைந்த மனிதர் போல் காட்சி அளிப்பீர்கள்)
3. தினமும் உணவுகளை உட்கொள்ளும் போது ஒரு இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடல் எடை அதிகரிக்கும்
4. பொதுவாக உடல் எடை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்வதால் நல்ல விதமான பலன்கள் எளிதில் கிடைக்கும் நல்ல விதமான உடல் நலன்கள் பெறுவீர்கள்
5. தினமும் ஊற வைத்த பாதாமை அதிகாலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதால் நல்ல விதமான பலனை பெற்று உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்
6. உடல் எடை அதிகரிக்க நல்ல தூக்கம் மிக மிக அவசியம் அதாவது எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் தூக்கம் மிகவும் அவசியம்
7. டென்ஷன் இல்லாத மனநிம்மதி மிக மிக அவசியம் யாருக்கெல்லாம் டென்ஷன் அதிகமாகிறதோ அவங்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. டென்ஷன் ஆகும்போது ஆசிட் வயிற்றில் அதிகமாக சுரக்கும் அதனால் வயிறு எரிச்சல் ஏற்பட்டு மொத்த உணவு செரிமானமாகி அது அத்தனை சத்துக்களும் வெளியேற்றப்படும். இதனால் நம் உடல் எடை அதிகரிக்காது அதனால் ஒவ்வொருவரும் நிச்சயமாக உடல் எடை அதிகரிக்க டென்ஷனை குறைத்துக் கொள்ள வேண்டும்
8. தினமும் முட்டை ஒரு கிளாஸ் பால் நிச்சயமாக சாப்பிட வேண்டும் பகலில் அல்லது இரவில் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக உடல் எடை அதிகரிக்கும்
9. 20 வயதிலிருந்து 30 வயது வரை இருக்கக்கூடிய ஆணும் பெண்ணும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் முடிந்தால் உங்கள் அருகில் இருக்கக் கூடிய உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று நீங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக நன்கு பசி எடுக்கும் நன்கு தூக்கம் வரும் இதனால் நல்ல விதமான உடல் சீரமைப்பை பெறுவீர்கள் இதனால் உங்களுடைய எடை அதிகரிக்கும்
10. தினமும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடல் எடை அதிகரிக்கும்
மேலே சொல்லப்பட்ட அந்த பத்து விஷயங்களை நீங்கள் பின்பற்றும் போது நிச்சயமாக ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் நல்லவிதமான எடை அளவு அதிகரிப்பதை உங்களால் காண முடியும் தயவு செய்து உடல் எடையை அதிகரிக்க மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் நேச்சுரல் இயற்கையாகவே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய எடைகளை அதிகப்படுத்துங்கள் அதுதான் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் மிகவும் நல்லது..