ஷீர்டி சாய் பாபா பற்றிய குட்டி கதை | Shirdi Sai Baba Short Story in Tamil

சீரடி சாய்பாபாவின் கதையைப் பற்றி நாம் சுருக்கமாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். சீரடி சாய்பாபா அவர் எங்கு பிறந்தார் எப்படி பிறந்தார் யாருக்கு பிறந்தார் என்பது பற்றிய ரகசியம் இன்று வரை யாருக்குமே தெரியாது, ஆனால் சீரடி சாய்பாபா ஒரு இஸ்லாமியர் வீட்டில் வளர்ந்தார் என்பதை பற்றி பலரும் சொல்ல நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். சிறு வயதில் சாய்பாபா ஒரு இஸ்லாமியர் வீட்டில் வளர்ந்தாலும் அவருக்கு ராமரை ரொம்ப பிடிக்கும் கோவிலுக்கும் செல்வார், மசூதிக்கும் செல்வார் அதனால் மசூதிக்கு வரக்கூடியவர்களும் அவரின் ஊரில் இருக்கக்கூடியவர்களும் சாய்பாபாவை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தார்கள், இதைப் பார்த்துக் கொண்டிருந்த இஸ்லாமிய தகப்பன் சாய்பாபாவின் மீது கவனத்தை அதிகமாக செலுத்த ஆரம்பித்தார், ஆனால் சாய்பாபாவுக்கு எம்மதமும் சம்மதம் என்ற நினைப்பு சிறுவயதிலிருந்தே இருந்து கொண்டிருந்தது அதனால் ராமரையும் வணங்கினால் இஸ்லாமிய கடவுளையும் வணங்கினார் ஒருநாள் சாய்பாபா இப்படி ஒரு பக்கம் நிலையாக இல்லாமல் இரண்டு பக்கமும் மாறி மாறி இருப்பதை ஒரு தரப்பினர் எதிர்ப்பு ஆரம்பித்தார்கள் அதற்கு பயந்துகொண்டு மிக பாதுகாப்போடு சாய்பாபாவை வளர்த்தார் அந்த இஸ்லாமிய தந்தை சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தன்னுடைய 16 ஆவது வயதில் சீரடியில் இருக்கக்கூடிய ஒரு வேப்பமரத்து அடியில் முதல் முதலில் சாய்பாபா அமர்ந்து கொண்டிருந்தார். அவரை முதல் முதலாக ஒரு பெண்மணி பார்த்தார் அந்தப் பெண்மணியை பிற்காலத்தில் தாயாக தத்து எடுத்துக் கொண்டார் சீரடி சாய்பாபா. அந்தப் பெண்மணி முதல் முதலாக சீரடி சாய்பாபாவை சீரடியில் வேப்பமரத்து அடியில் அமர்ந்திருந்த அந்த இளைஞனை பார்க்கும்போது மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு அன்பு. அவரைப் பார்த்தவுடன் தன் பிள்ளை என்று ஆறத் தழுவி கொண்டார் சாய்பாபாவை அந்தப் பெண். காலப்போக்கில் சாய்பாபாவின் உடைய தாயாக பெயர் பெற்றார்.

இதுவரை இப்படிப்பட்ட பளிச்சென்று முகம் கொண்ட ஒலி நிறைந்த தோற்றம் கொண்ட ஒருவரை ஷீரடியில் வாழ்ந்த மக்கள் யாருமே பார்த்ததில்லை வியப்போடு அந்தப் பக்கம் வரக்கூடிய அனைவரும் சாய்பாபாவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது அவருக்கு பெயர் சாய் பாபா அல்ல இளைஞர் அவ்வளவுதான் பெயர் யாருக்கும் தெரியாது சாய்பாபா என்ற பெயர் ஒரு கோவிலில் பூசாரி வைத்த பெயர் அது நாம் அடுத்து பார்ப்போம்.

பிற்காலத்தில் சாய்பாபா அங்கும் இங்கும் ஆக மாறி மாறி வாழ்ந்து கொண்டிருந்தார் சில வருடங்களுக்குப் பிறகு சீரடியிலேயே நிரந்தரமாக தங்கி கொண்டார் அதற்கு அப்புறம் வேறு எங்கும் செல்லவில்லை சீரடியிலேயே நிலையாக தங்கி கொண்டார் சாய்பாபா.

பிறகு துவாராக மாய் என்று ஒரு இடிந்த கட்டிடத்தை தன்னுடைய இருப்பிடமாக எடுத்துக் கொண்டார் காலப்போக்கில் அனைவரும் அவருக்கு உணவுகளை கொண்டு வந்து தந்தார்கள் அவரும் பசி எடுக்கும் போது பலரிடம் போய் பிச்சை எடுத்து தன்னுடைய பசியை போக்கிக் கொண்டிருந்தார். அதேபோல சில பேரிடம் சென்று பிச்சை கேட்பார் இதற்கு ஒரு காரணம் உண்டு அவர் பிச்சை கேட்கக்கூடிய நபர் யாராக இருந்தாலும் அவர்களுடைய பாவத்தை இவர் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு மோட்சம் அளிக்கின்றார் என்று பல பேர் சொல்லி நாம் கேட்டதுண்டு.

நாட்கள் கடந்து கொண்டிருந்தன அவருக்கு வயது ஆகிக்கொண்டு கொண்டிருந்தது. ஒருமுறை தன்னுடைய ஐம்பதாவது வயதில் அவர் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தன்னுடைய பூத உடலை விட்டு மூன்று நாட்கள் தன்னுடைய சீடர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டு விட்டு சாய்பாபா உடலை விட்டு உயிர் பிரிந்து கடவுளை சென்று மன்றாடி தன் பாவங்களை போக்கி பிறகு தன்னுடைய உடலுக்குள் நுழைந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அவருடைய இறுதி காலத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பல மருந்துகளை அருந்திக் கொண்டிருந்த சாய்பாபா. ஒரு நாள் நான் இறக்கப் போகும் செய்தியையும் அனைவரிடமும் தெரிவித்து அந்த நாள் அன்று அவர் உயிர் பிரிந்தார்.

என்றும் சாய்பாபா பல பக்தர்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top