ரோகிணி நட்சத்திரம் குணங்கள் / Rohini Natchathiram Kunangal ( Character) in tamil

ரோகிணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :
கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.
எளிதில் கற்று கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.
பொன், பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
தோல்வியை விரும்பாதவர்கள்.
அழகான தோற்றம் கொண்டவர்கள்.
பொறுமை என்பது இவர்களிடம் குறைவு.
சிக்கன குணம் அதிகம் கொண்டவர்கள்.
சுகபோக வாழ்க்கை வாழ விரும்பக்கூடியவர்கள்.
மற்றவர்கள் பொருட்களின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.
உணர்ச்சி வசப்படும் தன்மை கொண்டவர்கள்.
சிற்றின்பம் தொடர்பான செயல்பாடுகளில் விருப்பம் உடையவர்கள்.
புத்திக்கூர்மையுடன் செயல்படக்கூடியவர்கள்.
எதையும் நேர்மறையாக பேசும் குணம் கொண்டவர்கள்.
எதிர்கால குறிக்கோளுடன் செயல்படக்கூடியவர்கள்.
தலைமை பண்பு அதிகம் உடையவர்கள்.
தனது முடிவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.
சுதந்திர குணம் அதிகம் உடையவர்கள்.
சாமர்த்தியமான செயல்பாடுகளால் சூழ்நிலையை கொள்ளக்கூடியவர்கள். தனது கட்டுப்பாட்டில் வைத்து மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் வல்லவர்கள்.




















