ஆடி மாதம் என்றாலே முருகன் தான் ஞாபகத்திற்கு வருவார் ஏனென்றால் ஆடி மாதம் முழுவதும் ஆறுபடை வீடுகளில் ஒவ்வொரு சிறப்பு மிக்க நாள் அன்று ஒவ்வொரு கோவில்களில் சிறப்புமிக்க பூஜைகள் நடத்தப்படும். இதனால் நாம் வணங்கக்கூடிய தமிழ் கடவுளாகிய முருகனை ஒவ்வொரு மக்களும் வணங்கி சகல நன்மைகளையும் பெறுவார்கள். அப்படி முருகப்பெருமானை வணங்குவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
ஆடி மாதத்தில் நாம் முருகனை வணங்குவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:
1. ஆடி மாதத்தில் நாம் முருகப்பெருமானுக்கு பிடித்தமான செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை மனதார வேண்டி அவர் சன்னதிக்கு சென்று அவருக்கு அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி அந்த கோவிலை மூன்று முறை சுற்றி வந்து அவரை மனதார வேண்டினார் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கும்.
2. உங்கள் வீட்டு அருகாமையில் இருக்கக்கூடிய முருகன் கோவிலுக்கு சென்று குறிப்பாக வள்ளி தெய்வானை இருக்கக்கூடிய கோவிலாக இருந்தால் மிக சிறப்பு முருகர் கோவிலுக்கு சென்று ஒன்பது முறை அந்த மூலஸ்தானத்தை சுற்றி வந்து முருகனிடம் மனதார வேண்டி அவருக்கு தீபாராதனை கட்டி வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்காதவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும்.
3. ஆடி 1 அன்று ஒவ்வொருவரும் உங்கள் வீட்டு அருகாமையில் இருக்கக்கூடிய முருகன் சன்னதிக்கு சென்று மனதார முருகா என்று அழைக்கும் போது நிச்சயமாக முருகன் உங்கள் மனதில் இருக்கக்கூடிய அத்தனை வேண்டுதலையும் நிறைவேற்றிக் கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் அதனால் தான் ஆடி மாதத்தில் முருகனை வணங்குவதால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
4. குழந்தை இல்லாதவர்கள் முருகன் குழந்தையாக இருக்கக்கூடிய புகைப்படத்தை உங்கள் வீட்டில் வைத்து அந்த புகைப்படத்திற்கு முன் விளக்கேற்றி அந்த புகைப்படத்திற்கு பூஜை செய்து வணங்குவதால் கூடிய விரைவில் குட்டி முருகன் உங்கள் வயிற்றில் அவதரித்து பிறப்பான் என்பது ஐதீகம் அதனால் குழந்தை இல்லாதவர்கள் இந்த ஆடி மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நிச்சயமாக எண்ணி மூன்று மாதத்தில் நல்ல செய்தி உங்கள் காதுகளில் கேட்கும்.
5. தொழிலில் வளர்ச்சியில்லாதவர்கள் முருகப்பெருமானை மனதார நினைத்து நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் அவருடைய வேலை நிறுத்தி வைத்து அதன் பக்கத்தில் ஒரு உண்டியலையும் வைத்து முருகா என்று ஒவ்வொரு முறையும் அதில் பணம் போடும் போது சொல்லி, உங்களால் முடிந்த ஒரு ரூபாவை தினம்தோறும் அந்த உண்டிகையில் போட்டு எனக்கு வருமானத்தை ஈட்டி கொடு முருகா என்று மனமார வேண்டிக் கொண்டால் நிச்சயமாக உங்கள் தொழிலில் வளர்ச்சி அடைந்து வருமானம் வாரி வழங்குவார்.
6. ஆடி மாதம் முழுவதும் முருக பக்தர்கள் நிச்சயமாக மாமிசத்தை உண்ண மாட்டார்கள் ஒரு சிலர் ஒரு மாத காலம் என்னால் மாமிசத்தை உண்ணாமல் இருக்க முடியாது என்று சொன்னால் ஆடி ஒன்று ஆடிப்பெருக்கு ஆடி கிருத்திகை என்று சில முக்கியமான நாட்கள் உள்ளன அந்த நாட்களிலாவது மாமிசத்தை உட்கொள்ளாமல் முருகப்பெருமானுக்காக விரதம் இருங்கள் நிச்சயமாக உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய அத்தனை வியாதிகளும் தீரும் அதற்கு முருகப்பெருமானே சாட்சி.
ஆடி 1, ஆடி கிருத்திகை முருகப்பெருமானே அவதரித்த அந்த நாள் உங்களுடைய அத்தனை வேதனைகளையும் போக்குவதற்காக ஆடி மாதம் வந்திருக்கின்றன குடும்பத்தோடு முருகனை சந்தித்து பிரார்த்தனை செய்யுங்கள் சகல நன்மைகளையும் பெற்று சந்தோஷமாக வாழுங்கள் ஓம் முருகா அரோகரா..