குலதெய்வத்தை வணங்குவதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா.? Kula Dheivam vazhibadu

குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம் குலதெய்வத்தை வணங்குவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றியும் குலதெய்வத்தின் உடைய சிறப்புகள் பற்றியும் இன்று இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். பொதுவாக குலதெய்வம் என்பது நம் முன்னோர்களை வழிப்பட கூடிய ஒன்று மற்றும் நம் முன்னோர்கள் வணங்கி வந்த மூதாதைய கடவுளையும் நாம் நம் முன்னோர்களை தொடர்ந்து நாமும் வணங்க வேண்டும்.

குலதெய்வ வழிபாடு என்பது கோடி வழிபாடு என்பார்கள் பொதுவாக நாம் எத்தனை கடவுளை வேண்டி வேண்டி வேண்டிக் கொண்டாலும் அதனுடைய பலன் நமக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும் நாம் நம் குல தெய்வத்தை முதலில் வணங்கி விட்டு பிறகு மற்ற தெய்வங்களை வணங்கும்போது மற்ற தெய்வங்களினுடைய அருள் நமக்கு அதிகமாக கிடைக்கும் அதனால் தான் வருடத்திற்கு ஒரு முறையாவது நம் குல தெய்வத்தை நாம் மனதார வேண்ட வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

குலதெய்வத்தை வேண்டுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்

1. குல தெய்வத்தை வேண்டுவதால் நம்முடைய குலம் தளைத்து வாழையடி வாழையாக வளரும். எந்த ஒரு தங்கு தடையின்றி சந்தோஷமான வாழ்க்கையை நம் சங்கத்தினர் வாழ்வார்கள்.

2. குலதெய்வத்தை வணங்குவதால் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கி நமக்கு நன்மைகள் கிடைக்கும், அது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் இருக்கக்கூடிய சிறு சிறு தொந்தரவுகள் நீங்கி நமக்கு நல்ல காலம் பிறக்கும்.

3. எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன் நாம் முதலில் நம் குலதெய்வத்திடம் சொல்லிவிட்டு ஆரம்பிக்க வேண்டும் அப்படி ஆரம்பிக்கும்போது நாம் செய்யக்கூடிய எந்த ஒரு விஷயமும் தங்கு தடை இன்றி நமக்கு லாபத்தை ஈட்டி தரும் அது மட்டுமல்லாமல் பல நன்மைகளை நமக்கு அது வாரி வழங்கும்.

4. குல தெய்வத்தை வணங்குவதால் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய அத்தனை தீராத பிரச்சனைகளும் தீர்ந்து நமக்கு நன்மைகள் நடைபெறும் அது மட்டுமல்லாமல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் தொழிலில் வளர்ச்சி இல்லாதவர்களுக்கு வளர்ச்சியும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணக்கூடிய அத்தனை பேருக்கும் முயற்சிக்கு ஏற்ப பலனும், திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் கூடி வரக்கூடிய விஷயங்களும் நாம் குலதெய்வத்தை வணங்குவதால் நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

5. வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் குலதெய்வத்தை நிச்சயமாக ஒவ்வொருவரும் வணங்க வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. குலதெய்வம் தெரியாதவர்கள் நிச்சயமாக உங்கள் முன்னோர்களை கேட்டு தெரிந்து கொண்டு குலதெய்வத்திற்கு பூஜை செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் சகல சந்தோஷங்களும் நிறைந்து காணப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் குலதெய்வத்தை தெரியாமல் யாரும் இருக்கக்கூடாது. அதையும் மீறி தெரியாமல் யாரேனும் இருந்தால் உங்களுடைய தாத்தா பாட்டி தாத்தாவின் அண்ணன் பாட்டியின் அக்கா என்று யாரேனும் இருந்தால் அவர்களிடம் கேட்டு நம் குடும்பத்தின் உடைய குலதெய்வம் யார் என்பதை அறிந்து முடிந்தால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பூஜை செய்யலாம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை பூஜை செய்யலாம் அல்லது உங்களுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் உங்கள் குல தெய்வத்தை வணங்கலாம் அது மட்டும் அல்லாமல் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் உங்கள் குல தெய்வத்தை மனதார நினைத்து வேண்டி அவருக்கு பூஜை செய்த பிறகு நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்து பாருங்கள் நிச்சயமாக நன்மைகளை உங்களால் காண முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top