கடகம் ராசி 2025 வருடம் ராசி பலன் / Kadagam Rasi 2025 Varudam Rasi palan in tamil
கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம்.. கடகம் ராசி பூசம் நட்சத்திரம்.., ஆயில்யம் நட்சத்திரம்…)
கடகம் ராசியில் பிறந்த நீங்கள் சந்திரனின் முழு ஆதிக்கத்தில் பிறந்து பேச்சுத் திறமையில் வல்லவராகவும் மற்றும் மற்றவர்களை கவரும் வசிகர படுத்தக்கூடிய உடல் மற்றும் முகம் தோற்றம் கொண்டவராகவும் கடவுள் அருளால் இயற்கையிலேயே இருப்பீர்கள்.

உங்கள் கடகம் ராசிக்கு இந்த ஆண்டு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் உங்கள் ஆண்டுகோள் என சொல்லி வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் மே மாதம் 14-05-2025 முடிவில் சஞ்சாரம் செய்வதால் வருடத்தின் முதல் நான்கரை மாதங்கள் உங்களுடைய பொருளாதார நிலமை மிக மிக மிக நன்றாகவே இருப்பது உங்களால் உணரமுடியும்,, மற்றும் மங்கலகரமான சுபகாரியங்கள் பலவிஷ்யம் உங்களுக்கு கைகூடக்கூடிய ஒரு மிக பெரிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு.
இந்த ஆண்டு நீங்கள் பலவகை நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், திருமணமான புதுமண தம்பதிகளுக்கு கடவுள் அருளால் அழகிய இரு குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்களுக்கு குருவின் சாதக சஞ்சாரத்தால் இந்த ஆண்டின் முற்பாதியில் பல்வேறு மாற்றங்கள் மறக்க முடியாத மிக இனிய நிகழ்வுகள் உங்களுக்கு நடக்கப்போகிறது..
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் காக்கரை வேண்டும். குறிப்பாக வயிறு, அஜீரண கோளாறு, மற்றும் கை, கால் அசதி போன்றவை உண்டாகும்.., ஆனாலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.. குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது மிக முக்கியம்., பொதுவாகவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியம்.