திருமணம் தடைப்பட என்ன காரணம்.?

திருமணம் தடைப்பட என்ன காரணம்.? :-

திருமணம் தடைப்பட என்ன காரணம் திருமணம் தாமதமாக என்ன காரணம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக முக்கியமான ஒரு விசேஷமாக பார்க்கப்படுகிறது திருமணம் ஒவ்வொரு ஆணும் சரி பெண்ணும் சரி ஆக வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக இன்று பார்க்கப்படுவதற்கு காரணம் நம்முடைய தலைமுறை இந்த உலகத்தில் விட்டுச் செல்வதற்காக நாம் இந்த உலகத்தை விட்டுச் சென்றாலும் நம்முடைய தலைமுறைகள் அடுத்தடுத்து இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் என்பது ஒவ்வொருவரின் உடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கிறது.
அப்படி திருமணம் தடைபட்டுக் கொண்டே போகிறது என்ன காரணமாக இருக்கும் என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
திருமணம் தடைபட என்ன காரணம்:-
1.ஒருவருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே போகிறது என்றால் முதலில் நீங்கள் பார்க்க வேண்டிய விஷயம் உங்கள் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் தோஷங்கள் ஏதாவது இருந்தால் அதற்கான பரிகாரத்தை செய்ய வேண்டும் அதற்கான பரிகாரம் பூர்வீக கோவிலாக திகழக்கூடிய ஆயிரம் ஆண்டுகள் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலில் செய்வதன் மூலமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
2. உங்களுடைய ஜாதகத்தில் உங்களுக்கு குரு பலன் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும் அப்படி குரு பலன் வரும் போது நீங்கள் பெண் பார்க்க ஆரம்பித்தால் அல்லது ஆண் பார்க்க ஆரம்பித்தால் உடனடியாக உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் அதனால் குரு பலன் மிக முக்கியம்.
3. மூன்றாவதாக உங்களுடைய குலதெய்வ வழிபாடு மிக முக்கியம் ஏதாவது ஒரு வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள் திருமணம் நடந்தால் நான் செய்கிறேன் என்று கண்டிப்பாக நடக்கும் பிறகு உங்களுடைய நட்சத்திரத்திற்கான அதி தேவதை யார் என்று கண்டுபிடித்து அந்த தேவதையை நீங்கள் வணங்க வேண்டும் அதற்கான பதிவு நம்முடைய வெப்சைடில் பதிவிட்டு இருக்கின்றோம் அதையும் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
4. ஒருவேளை எனக்கு குரு பலன் இல்லை என்று சொல்லக்கூடியவர்கள் பெண்ணோ ஆணும் யாராவது ஒரு குரு பலன் இருந்தால் அதை வைத்து திருமணம் தாராளமாக செய்து கொள்ளலாம்.
5. இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நாட்கள் கடந்து போய் விடுகின்றன 28 29 30 வயது 31 வயது கூட ஆகிவிடுகின்றன திருமணம் நடப்பதற்கு அதனால் கவலைப்பட வேண்டாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருங்கள் நிச்சயமாக ஒரு நல்ல பலனை உங்களால் அனுபவிக்க முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top