சாய்பாபா இன்று நமக்கு சொல்லும் அறிவுரை / சாய்பாபா பொன்மொழிகள் / Shirdi Sai Baba advice in Tamil :-
சாய் பக்தர்களுக்கு வணக்கம்.
தினமும் சாயப்பா பொன்மொழிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அதில் இன்று.
இந்த உலகத்தில் நீங்கள் ஒழுக்கமாக வாழ்ந்தாலும் உங்களை குறை கூறுவார்கள் ஒழுக்கமற்று வாழ்ந்தாலும் இந்த உலகம் உங்களை குறை கூறு அதனால் இந்த உலகத்தில் இருக்கக்கூடியவர்கள் உங்களைப் பற்றி பேசக்கூடிய எந்த ஒரு வார்த்தைக்கும் நீங்கள் மனதளவில் இடம் கொடுத்து விடக்கூடாது.
உங்களை குறை சொல்லக் கூடிய யாருமே நீங்கள் கஷ்டப்படும் போது உங்களுக்கு உதவப் போவதில்லை.
நீங்கள் பசியோடு இருக்கும்போது உங்கள் பசியை ஆற்ற போவது அல்ல.
மாறாக இந்த உலகம் நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்களா என்று கேள்வியை கூட கேட்க போவதில்லை.
ஆனால் இந்த உலகம் உன்னை குறை சொல்வதற்கு என்று ஓடி வந்து விடும் அதனால் இந்த உலகத்தில் நம்மை சுற்றி இருக்கக்கூடிய யார் எதை பேசினாலும் அதை மனதளவில் எடுத்துக் கொள்ளாமல் தட்டி விட்டு செல்ல வேண்டும்.
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சாயப்பாவிடம் சொல்லுங்கள் அவர் பார்த்துக் கொள்வார் எந்த கவலையும் வேண்டாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சாய்பாபா உங்களோடு இருந்து கொண்டிருக்கிறார் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் உங்களை வளர்த்து விடுவதற்காக.
ஓம் சாய் ராம்..