சித்ரா பௌர்ணமி என்று சொன்னாலே கண்டிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் ஞாபகத்திற்கு வரும் ஆனால் அதைத் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது சித்ரா பௌர்ணமி தினத்தன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக குபேரன் அருள் வேண்டும் குபேரனின் அருள் உங்களுக்கு வேண்டுமென்றால் குபேரன் மனைவியான தாயாரை நீங்கள் வணங்க வேண்டும் தாயார் அப்பனிடம் சொல்லி நம் வாழ்க்கையில் செல்வங்களை மேம்படுத்துவாள்.
அந்த வகையில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று நீங்கள் சிவபெருமானை வழிபட்ட கையோடு வீட்டில் வந்து சித்ரா பௌர்ணமி தினத்தன்று குபேரன் மனைவி சித்ரா தேவியை வழிபட வேண்டும் எப்படி வழிபட வேண்டும் நெய்தீபம் ஏற்றி குபேரனை முதலில் வணங்கி விட்டு பிறகு தாயாரை சித்ரா தேவியை மனதார நினைத்து வாழ்க்கையில் செல்வங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லி மனமார பிரார்த்தனை செய்ய வேண்டும்.